Tuesday, April 30, 2013

சமூக நீதி மாநாடு துவக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா – கண்ணகி நகர் – கான்ஜிபுரம் மாவட்டம்

SDPI – சமூக நீதி மா நாடு துவக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா – கண்ணகி நகர் – கான்ஜிபுரம் மாவட்டம்
sdpi---pub3 sdpi-pub1 sdpi-bag1 sdpi-stage sdpi--public sdpi-pub2 sdpi-bag2

எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவிவுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு

                        
 
     விடுதலை சிறுத்தை கட்சி மாநில தலைவர் திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வருகை தந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவிவுடன் மரக்காணம் கலவரம் சம்ந்தமாக கலந்துரையாடினார் .அப்பொழுது திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரிடம் மரக்காணம் கலவரத்தில் தலித்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றியும்,தலித்களின் வீடுகள் எரிக்கப்பட்டது சம்ந்தமாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களின் வன்முறையை தூண்டும் பேச்சுகளை பற்றியும் எடுத்துரைத்தார் மேலும் தலித்துகளுக்கு ஆதரவு தருமாறும் கேட்டு கொண்டார்.அருகில் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாநில நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலப்பாளையத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

                      


     வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் 26/04/13 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மாவட்டதலைவர் அஹமது நவவி தலைமை தாங்கினார்.

     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட செயலாளர் முஹம்மது கனி அவர்கள் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் பைசல் அகமது மற்றும் SDPI மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர் முஹைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் மேலப்பாளையம் நகரத்தலைவர் அப்துல் லத்தீப் நன்றியுரை ஆற்றினார்.

     முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்த்திற்காக 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் முன்னோர்களால் வக்ஃப் செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வக்ஃப் சொத்துக்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. முறையான நிர்வாகம் இல்லாததால் வக்ஃப் வாரியம் வருமானம் இன்றி இருந்து வருகின்றது. எனவே தமிழக அரசு இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு வக்ஃப் சொத்துக்கள் முறையாக பராமரிப்பதற்கும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்பதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

     ஆர்ப்பாட்டத்தில் வக்ஃப் சொத்துக்களை மீட்கக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான பொது மக்கள் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.

     இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

     மத்திய மாநில அரசுகளுக்கு நாம் வைக்கும் கோரிக்கைகள்:

     வக்ஃப் வாரிய பணியாளர்களை அதிகப்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

     வக்ஃப் வாரிய பணியாளர்களை வெளிப்படையான தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

     வக்ஃப் வாரியத்திறகென மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் மானிய நிதியினை அதிகப்படுத்த வேண்டும்.

     வக்ஃப் வாரியத்தின் மத்திய மாநில முதன்மை பதவிகளுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

     வக்ஃப் வாரியத்திற்குட்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க அவ்வழக்குகளை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

     வக்ஃப் வாரியத்திற்குட்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கும் விதமாக தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய வழக்கறிஞர்களை வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்.

        வக்ஃப் வாரிய நிலங்களின் பதிவுகளை உடனடியாக முறைப்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

     ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களை மீட்க மாநில அளவில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுவினை ஏற்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் அளவு மற்றும் அதை மீட்பதற்கான வழிமுறைகளை கேட்டறிந்து அரசு அதன் அடிப்படையில் வக்ஃப் வாரிய நிலங்களை மீட்க உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்.

     ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் எத்தனை வக்ஃப் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்களென மாதம் தோறும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அரசாணை பிறப்பிக்கபட்டும் அது இன்று வரை மாவட்ட ஆட்சியர்கள் அலட்சியப்படுத்தி வருகிறார்கள். மேற்படி வக்ஃப் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     ஒத்தி மற்றும் வாடகைக்கு விடப்பட்ட வக்ஃப் நிலங்களின் ஒப்பந்தததை உடனடியாக இன்றைய பொருளாதார அடிப்படையில் புதுப்பித்து வக்ஃப் வாரிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும்.

     சிறுபான்மை சமூகம் பயன்பெறும் வகையில் வக்ஃப் வாரியம் மூலமாக பள்ளிக் கூடங்கள்இ மருத்துவக் கல்லூரி சட்ட மற்றும் வக்ஃப் வாரிய பல்கலைக்கழகம் ஏற்படுத்த மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

புங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை !

                   
 
     மயிலாடுதுறை :- மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

      நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், முஸ்லீம் மாணவிகள் செயல் முறை விளக்கம் காண்பித்தனர்.
     முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர்.

நன்றி : காலை நாளிதழ் thanks, asia

இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் - திருமாவளவன் சந்திப்பு!

                              
  •      சென்னை: கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

         இச்சந்திப்பில் மரக்காணத்தில் தலித் மக்கள் வசிக்கின்ற காலனி பகுதிகள் வன்முறையாளர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டதையும், தலித் மக்கள் மீது மட்டுமல்லாமல் கூனிமேடு பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கூனிமேடு பகுதிக்கே நேரில் சென்று, தான் பார்வையிட்ட தகவல்களையும் அப்போது பகிர்ந்து கொண்ட திருமா, இந்த கலவரம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதை சுட்டிக் காட்டி வரவேற்றார்.

          இந்திய தவ்ஹீத் ஜமாஅத் விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்

          திரு மாவளவனுடன் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் முஹம்மது யூசுஃப், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மற்றும் சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இரு தரப்பு நிர்வாகிகளும் பல்வேறு விஷயங்களைப் பறிமாறிக் கொண்டனர்.thanks, asia

ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று அவர் மீது வழக்குப் பதிவு’ - ஜெயலலிதா அறிவிப்பு!


      பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரம் தெடர்பாக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.
     இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, “பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் பேசும் போது, ‘11½ மணிக்குப் பேசறேன் - போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது’ என்று கூறியுள்ளார். பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.” என்றார். thanks, asiananban

சமூகப் பொறுப்புடன் செயல்படுவார்களா ஜாதிய தலைவர்கள்?

 

     ஏப்ரல் 30/2013: டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி ரவுடிச அரசியலில் இறங்கி இருக்கிறது.
     டாக்டர் ஐயா மரம் விட்டு மரம் தாவுவது போல் கட்சி விட்டு கட்சி தாவி அரசியல் நடத்தி தனது மகன் அன்பு மணிக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தார். தமிழக அரசியலில் இரட்டை நாக்கு, பச்சோந்தி என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு வரலாறு படைத்தார்.



     இப்பொழுது இவரது ஜம்பிங் அரசியல் எடுபடவில்லை என்றதும் மீண்டும் பின்னோக்கி சென்று ஜாதி வெறி தூண்டி, மரம் வெட்டி கட்சி நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் போலும். இதை 25.04.13 அன்று இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மூலம் நிரூபித்திருக்கிறார்.

     வன்னிய சமூக மாநாடுகள், இளைஞசர் நிகழ்சிகள் நடத்துவதில் தவறில்லை. ஆனால் அதை நடத்த அவர் செய்த தயாரிப்புகள் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களின் செயல்பாடுகளோடு இவரை ஒப்பிட வைக்கிறது. தலித் மக்களோடு தங்களுக்குள்ள பிரச்னையை சந்திக்க தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 32 மாவட்டங்களுக்கு பயணம் சென்று பிராமண மற்றும் ஆதிக்க ஜாதி அமைப்புகளை, சங்கங்களை ஒன்று சேர்த்திருக்கிறார்.

     அரசியலுக்காக கூட்டு சேரலாம் தவறில்லை ஆனால் தலித் மக்களை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கெதிராக ஒரு படையை தயாரிப்பது போல் ஆதிக்க ஜாதி அமைப்புகளை ஒன்று சேர்த்திருப்பது ஆபத்தானது. மீண்டும் தமிழகத்தில் ஜாதிய வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கவே இது உதவும். ஜாதிய இயக்கங்களும், சங்கங்களும் தங்களது ஜாதி மக்களுக்கு சமூக சேவை செய்வதற்காகவே, அதைவிட்டு தங்களது ஜாதியில் உள்ள உழைக்கும், ஏழை எளிய மக்களை பயன்படுத்தி தங்களை வளர்த்து கொள்வதற்கு அல்ல.

     ராமதாஸ் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்களில் சிலர் மரக்காணத்தில் தலித் மக்கள் காலனிக்குள் சென்று வீட்டில் இருந்தவர்களை கண் மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்துள்ளனர். அப்பாவி தலித் மக்களின் குடிசைகளையும், இஸ்லாமியர்களின் கடைகளையும் தாக்கித் தீ வைத்ததுடன், அரசுப் பேருந்துகளையும் தனியார் வண்டிகளையும் கொளுத்தியுள்ளனர். மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.

      இந்த ஜாதிய தலைவர்கள் குறைந்தபட்சம் தங்களை நம்பி இருக்கும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்யா விட்டாலும் குறைந்தபட்சம் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். ராமதாஸோ, அவரது மகனோ எந்த பிரச்சனைகளையும் சந்திக்க போவதில்லை. இவர்கள் உருவாக்கும் ஜாதிய வேள்வியில் கருகப்போவது என்னவோ உழைக்கும் ஏழை மக்களே. இது ராமதாசுக்கு மட்டுமல்ல ஜாதிய, மத தலைவர்கள் என்று சொல்லி செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். இதுபோன்ற தலைவர்களுக்கு சமூக பொறுப்புண்டு அதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். thanks, sinthikkavum 

கர்நாடகா பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை: பிரதமர் மன்மோகன் சிங்!

                          30 Apr 2013manmohan Singh hits out at BJP government in Karnataka   
 
     ஹுப்ளி/பெங்களூர்:சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகா மாநிலத்திற்கு பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தார்.
 
     கர்நாடகாவில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் சென்றடையவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜ.கவின் 5 ஆண்டுகால ஆட்சியில் சமூக ஐக்கியம் சீர்குலைந்துவிட்டதாகவும், இதில் தனக்கு கவலை உண்டு என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
 
      பிரதமர் மன்மோகன் சிங் மேலும் பேசியது: கர்நாடகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான காலம் கனிந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து, கர்நாடகத்தில் ஊழலற்ற, நல்லாட்சி மலர வழி ஏற்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
      கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் முழுமையாகத் தடைபட்டுள்ளன. மத்திய அரசு வழங்கிய மானியத்தையும் கர்நாடக பாஜக அரசு முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், குடிநீர், மின்சார சிக்கல்களை மாநிலம் எதிர்கொண்டுள்ளது.
 
      பாஜக அரசில் அங்கம் வகித்த பல அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். மேலும் பலர் ஊழலுக்கு துணை போயுள்ளனர். அமைச்சர் பதவியை இழந்து, சிறைக்குச் சென்றவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சியை வழங்கிய பாஜக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும். மக்கள் விரும்பும் நல்லாட்சியை கர்நாடகத்தில் வழங்க காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும்.
 
      5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பாஜக அரசின் ஊழல், நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் பாஜக அரசு தோல்வி கண்டுள்ளது.
 
      காங்கிரஸ் ஆட்சி செய்தபோதெல்லாம் கர்நாடகம் வளமான, செழிப்பான மாநிலமாகத் திகழ்ந்தது. எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, தரம்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்த போது கர்நாடகத்தின் புகழ் உலகெங்கும் பரவியிருந்தது. குறிப்பாக, பெங்களூர் சர்வதேச அளவில் புகழின் உச்சியில் இருந்தது.
 
     பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சர்வதேச அளவில் கர்நாடகம், பெங்களூரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பு மகத்தானது. தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்களை நாட்டுக்கு அளித்ததில் கர்நாடகம் முன்னோடியாக உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, வேளாண்மைத் துறையில் முன்னேற்றம் காண, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவோம்.
 
     சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள ராய்ப்பூர், பெல்லாரி, குல்பர்கா, பிடார் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைமுறைப்படுத்தவில்லை.சமுதாய ஐக்கியமின்மையும், பாதுகாப்பற்ற சூழலும் இவ்விடங்களில் நிலவுகிறது.
 
     மத்திய அரசின் திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட ஏராளமான நிதிகளை மாநில அரசு உபயோகிக்கவில்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மதிய உணவு திட்டம், கிராமீய சாலை வளர்ச்சி ஆகியவற்றிற்கான நிதிகளை உபயோகிப்பதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகா மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லும்.இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: நம்பிக்கையுடன் 199 தொகுதிகளில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணி!

sdpi karnataka
 
     பெங்களூர்:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பிக்கையுடன் களத்தில் உள்ளது. இக்கூட்டணி 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 175 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
 
     கட்சி உருவாக்கப்பட்ட பிறகு எஸ்.டி.பி.ஐ முதன் முதலாக கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
 
      மாநகராட்சி-உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ தனது பலத்தை நிரூபித்திருந்தது.பெங்களூர், மங்களூர் மாநகராட்சிகளில் எஸ்.டி.பி.ஐக்கு கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் 70க்கும் அதிகமான இடங்களை எஸ்.டி.பி.ஐ வென்றது.
 
     முஸ்லிம்-தலித் வாக்குகளை குறிவைத்துள்ள எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணியை முக்கிய அரசியல் கட்சிகள் கவலையுடன் பார்க்கின்றன.
 
                    
 
     25 சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள், 14 சதவீதம் முஸ்லிம்கள் ஆகியோரின் பிரச்சனைகளையும், உரிமைகளையும் எழுப்பி எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜின் புதிய கூட்டணி களத்தில் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியான ஆம் ஆத்மியின் கர்நாடகா பிரிவு எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவு அளித்துள்ளது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் புலிகேஷ் நகர் தொகுதியிலும், மைசூரில் நரசிம்ஹராஜா தொகுதியிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
     புலிகேஷ் தனி தொகுதியில் எம்.பி.ஏ பட்டதாரியான ஹேமலதா எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் ஆவார்.1,85,561 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில் 94, 664 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த மாநகராட்சி தேர்தலில் பீஜிஹள்ளி வார்டில் போட்டியிட்டு 3 ஆயிரம் வாக்குகளை ஹேமலதா பெற்றிருந்தார்.இத்தொகுதியில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளரும் இவரே. தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏவான பிரச்சனா குமார் முக்கிய எதிராளி.
 
     மைசூரின் நரசிம்ஹராஜா தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் அப்துல் மஜீதும் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தன்வீர் சேட், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வாக்காளர்களிடையே உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தலில் 13 இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ 4 இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தது.இதுவும் எஸ்.டி.பி.ஐயின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.மொத்தம் வாக்காளர்களில் (2,33,016) முஸ்லிம் வாக்காளர்கள் 93 ஆயிரம் பேரும், ஒடுக்கப்பட்ட சமூக வாக்காளர்கள் 50 ஆயிரம் பேரும் உள்ளனர்.
 
     மஹ்பூப் ஆவாத் ஷெரீஃப்(சர்வஞ்ச நகர்), உஸ்மான் பேக்(சாமராஜ் பேட்), முஜாஹித் பாஷா(சிக்பேட்டா), வழக்கறிஞர் அப்துல் மஜீத்(பண்ட்வால்), முஸப்பா(சுள்ளி), உத்தமஜ்ஜய்யா(ஹுஸூர்) ஆகியோர் அதிகமான வாக்குகளை பெறுவார்கள் என கருதப்படுகிறது.
 
     பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மாரஸந்திர முனியப்பா, டாக்டர் சி.எஸ்.துவாரகாநாத், என்.மகேஷ் மற்றும் எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சொரஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் குற்றவாளியான ஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் தங்கினார்! – தனியார் தொலைக்காட்சி அம்பலம்!

                           30 Apr 2013 Rajkumar pandian
 
     அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தங்கியதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.
 
     1996ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பாண்டியன், 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கை குஜராத் மாநிலத்துக்கு வெளியே விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாண்டியன் மும்பை சிறைக்கு மாற்றப்பட்டார்.
 
     இந்நிலையில், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டியனை ரயில் மூலம் அஹ்மதாபாதுக்கு அழைத்து வந்தனர். அரசு இல்லத்தில் இரவு தங்க வேண்டிய அவர், பிரஹலாத் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.
 
     பாண்டியன், கார் மூலம் வீட்டுக்குச் சென்றதை தனியார் தொலைக்காட்சி படம் பிடித்து வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட அவரை செய்தியாளர்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் ரகசிய தகவல்களை வெளியிட்ட 3 கடற்படை அதிகாரிகளை நீக்க நடவடிக்கை!

                     30 Apr 2013 Three Navy officers to be sacked
 
     புதுடெல்லி:கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாக 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
     இத்தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.
 
     பல்வேறு தவறுகளை செய்ததாக முப்படைகளில் அதிகாரிகள் நிலையில் இருந்து வீரர்கள் நிலை வரை உள்ளவர்களில் 219 பேர் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
     ரகசியமாக காக்கப்பட வேண்டிய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியதாக 2011-ம் ஆண்டில் 4 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக் குழு இதனை ஆய்வு செய்து, 3 பேரை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் அவர்களை பதவி நீக்க முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
      இதே போல ரஷிய பெண் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கமாண்டர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி 2011-ம் ஆண்டில் விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்யப்பட்டார். விமானப்படை மீது உள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுகள் லஞ்சம், ஊழல் தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
     சமீபத்தில் கடற்படை அதிகாரிகள் தங்களுக்குள் மனைவிகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவியே இக்குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இஷ்ரத் ஜஹான்:விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை – சி.பி.ஐ புகார்!

                        30 Apr 2013 Gujarat shielding cop linked to Ishrat Jehan case, claims CBI
 
     புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் மோடியை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை என்று சி.பி.ஐ புகார் கூறியுள்ளது.
 
     குஜராத் கூடுதல் டி..ஜி.பிக்கும், சம்பவம் நிகழ்ந்தபோது அஹ்மதாபாத் இணை கமிஷனராக பதவி வகித்த பி.சி.பாண்டேவுக்கும் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரின் கொலையில் சதித்திட்டம் தீட்டியதில் பங்குண்டு என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்,பாண்டேயின் விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை. பாண்டே மீது கைது வாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்தை அணுகப்போவதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
 
     1980 ஆம் ஆண்டு பாட்சில் ஐ.பி.எஸ் அதிகாரியான பாண்டேவை சி.பி.ஐ ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால், இச்செய்தியை மறுத்துள்ளது சி.பி.ஐ.இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரின் போலி என்கவுண்டர் படுகொலைகளில் பங்குண்டு என்று குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த கே.ஆர்.கவுசிக் மற்றும் பாண்டே ஆகியோரின் பங்கினை குறித்து சி.பி.ஐ விசாரித்தது.
 
     குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர் படுகொலை வழக்குகளில் சிக்கி பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
     சாதிக் ஜமால் என்ற இளைஞரை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரிஷ் சிங்கால், முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்ட் தருண் பரோத், முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கே.ஜி.பர்மர் ஆகியோரை சி.பி.ஐ ஏற்கனவே கைதுச் செய்திருந்தது.
 
     சொஹ்ரபுத்தீன் ஷேக், அவரது மனைவி, சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சாட்சியான துளசிராம் பிரஜாபதி ஆகியோரி போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், என்.கே.அமீன் ஆகியோர் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறைகளில் சிறந்த வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கல்வி நிறுவனங்களா? கொள்ளையர்களின் கூடாரமா?


     ஏப்ரல் 29/2013: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

     ஏழ்மை, வறுமை காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் பலர் திணறுகின்றனர். சம கல்வி, உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசம் ஆகியவற்றை அமல்படுத்த எந்த அரசும் தயாராக இல்லை.


     இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் இந்தியா முழுவதும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரச்சாரம் டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கோட்டையில் துவங்கியது.
     "நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அளிப்பது சமூகத்தின் கடமையாகும். சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் இதுவே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
 
      கிராமப்பகுதிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ ஒவ்வொரு ஆண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் மூலம் ஒரு லட்சம் ஸ்கூல் கிட் (பள்ளிக்கூடம் செல்ல தேவையான புத்தகங்கள், இதர பொருட்கள் அடங்கிய பை) விநியோகிக்கப்படுறது. மேலும் கல்வி குறித்த சர்வே, கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் செய்து வருகிறது.

     சிந்திக்கவும்; எல்.கே.ஜி., யு.கே.ஜி போன்ற படிப்புகளுக்கே பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களின் வாயிலில் பண மூட்டையோடு தவம் கிடக்க வேண்டியது இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் கொள்ளையர்களின் கைகளில் சிக்கி தவிக்கிறது. கல்வி கொள்ளையர்கள் குழந்தைகளுக்கு கூட நுழைவு தேர்வு நடத்து கின்றனர்.

     கல்வியை வியாபாரம் ஆக்கி கொள்ளையடிக்கும் பெரும் கூட்டத்தினர் வாழும் நாட்டில் வருங்கால சந்ததிகளின் நலன் கருதி கல்வி குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருவதோடு ஒரு லட்சம் குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்வதற்கு நமது பாராட்டுகள். thanks, sinthikkavum

Monday, April 29, 2013

சனி, ஏப்ரல் 27, 2013 Adirai தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தே.பா., சட்டம் ரத்து!


     தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
     தஞ்சை அதிராம்பட்டின‌த்தை சே‌ர்‌ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி, இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து இலங்கை பா‌கி‌ஸ்தா‌ன் தூதரக அ‌திகா‌ரிக்கு அளித்ததாக தமிழக ‘க்யூ ப்ராஞ்ச்’ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
     ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரையோர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்து இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தாக கூறி திருச்சி விமானநிலையத்துக்கு போகும் வழியில் கைது செய்ததாக காவல்துறை அறிவித்தது.
      மேலும் அன்சாரி இந்திய நாட்டுக்கு எதிராக சதி செய்து ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு கொடுத்து நாட்டின் ராணுவத் தளங்களை அழிக்க முயற்சி செய்ததாக கூறி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில் இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்துவந்தது. நேற்று இவ்வழக்கு விசாரணையின் போது வழக்கின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் சத்தியநாராயணா, செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த அன்சாரிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !

                              
     பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது !

     இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க முடியும் என்பதை இன்றைக்கு பார்த்த போது உண்மையிலேயே இதை இயக்கிய சிபிச்சந்தரை பாராட்டுகிறேன்.
ஏன் எனில் நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்துள்ளார் !

     இந்தக் படக் குழுவினரோடு இந்த மேடையில் நிற்க வெட்கப்படுகிறேன்! ஏன் என்றால் 10 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்தும் நாங்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்துள்ளார்கள் ! இந்த ஆவணப்படத்தின் போக்கை திசை மாற்றியவன் என்று சொன்னார்கள் ! உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை 'இந்த இடத்திற்கு இப்படிப் போகக் கூடாது இப்படிப் போகணும்' என்று அட்ரஸ் சொன்னத்ற்கே இந்த மேடையில் இவ்வளவு கண்ணியம் என்றால் உண்மையிலேயே ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்நேரம் இது போன்று இஸ்லாத்தை சொல்லும் ஆவணப்படங்கள் எத்தனையோ வந்திருக்கும் என ஆதங்கப்பட்டார் !

- நன்றி - Sengis Khan 3 thanks, asiananban

Sunday, April 28, 2013

பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் டெல்லியில் துவங்கியது!

                    



புதுடெல்லி: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் இந்நிகழ்ச்சி துவங்கியது.

எஸ்.சி-எஸ்.டி கமிஷனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி தனது உரையில், "ஒடுக்கப்பட்ட பிரிவினரில் பெண் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்" என்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அளிப்பது சமூகத்தின் கடமையாகும். சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கவேண்டும். கிராமப்பகுதிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் மூலம் இவ்வாண்டு ஒரு லட்சம் ஸ்கூல் கிட்(பள்ளிக்கூடம் செல்ல தேவையான புத்தகங்கள், இதர பொருட்கள் அடங்கிய பை) விநியோகிக்கப்படும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல எழுத்தாளரும், ஆல் இந்தியா எஜுகேஷனல் மூவ்மெண்டின் துணைத் தலைவருமான மன்சூர் ஆகா கூறுகையில், "ஏழை மாணவர்களை கல்வியில் ஊக்கமூட்டும் பாப்புலர் ஃப்ரண்டின் பணி பாராட்டத்தக்கது" என்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் கம்யூனிட்டி டெவல்ப்மெண்ட் துறையின் பொறுப்பாளர் சி.கே.ஆஸிஃப், டெல்லி மாநில தலைவர் அன்ஸார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்த உள்ளது.







அப்பாவி முஸ்லிம்கள் கைது:மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

                                         
 
    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள்(கிச்சான் புகாரி,பஷீர்,பீர் மைதீன் ) பலரை பெங்களூர் குண்டு வெடிப்பில் போலியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும்,உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மேலப்பாளையத்தில் 27.04.2013 அன்றுஅனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு (எஸ்.டி.பி.ஐ ,த.மு.மு.க , பாப்புலர் ஃப்ரண்ட் ,ம.ம.ம.க,தஹ்வா ஜமாத் ,இந்திய தொவ்ஹித் ஜமாத்,ம.ம.க ,சிறுபான்மையினர் அறக்கட்டளை.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலும் பல இயக்கங்கள்) சார்பாக ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


     இதனால் மேலப்பாளையம் நகரம் முழுவதும் ஆட்டோக்கள் ,தனியார் பேருந்துகள் மற்றும் கார்கள் எதுவும் ஓட வில்லை.மேலும் அணைத்து கடைகளும் அடைக்கபட்டிருந்தது.மாலை 4 மணிக்கு பஜார் திடலில் வைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.இதில் எஸ்.டி.பி.ஐ,பாப்புலர் ஃப்ரண்ட் உள்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.இந்த தர்ணா போராட்டத்திற்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர் மீரான் அன்வாரி தலைமை தாங்கினார் இந்த பொதுகூட்டதிற்கு பல்லாயிரகணக்காண மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் .



















































தினமலரில் வந்த செய்தி


தினகரனில் வந்த செய்தி


தினத்தந்தியில் வந்த செய்தி