Wednesday, June 5, 2013

காலித் முஜாஹித் :விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்- குடும்பத்தினர் முடிவு!

        4 Jun 2013
 
      ஜாவன்பூர்:போலீஸ் கஸ்டடியில் மரணித்த காலித் முஜாஹிதின் கைதுத் தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இம்மாதம் 6-ஆம் தேதிக்குள் விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிடாவிட்டால் உ.பி மாநில சட்டப்பேரவைக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக காலித் முஜாஹிதின் மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி தெரிவித்துள்ளார்.
 
    2007-ஆம் ஆண்டு உ.பி மாநிலத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் காலித் முஜாஹித், ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தி விட்டு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்படும்போது மர்மமான முறையில் மரணமடைந்தார். மே 18-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.இவரது மரணம் போலீஸ் நடத்திய படுகொலை என்று பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முன்னர் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியின் போது காலித் முஜாஹித் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஆர்.டி.நிமேஷ் தலைமையிலான கமிஷன் நியமிக்கப்பட்டது.
 
     ஆனால், கமிஷன் அறிக்கையை அளித்த பிறகும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு இதுவரை வெளியிடவில்லை. விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிடுவோம் என்று அரசு கூறியபோதும், அதில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஃபலாஹி கூறுகிறார்.”எங்களுடைய போராட்டம் காலித் முஜாஹிதிற்கு மட்டும் அல்ல. பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நிரபராதிகளான முஸ்லிம்களுக்காகவுமே எங்களுடைய போராட்டம். முஜாஹிதின் மரணம் குறித்து விசாரணை நடத்தசி.பி.ஐயிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்”.-இவ்வாறு ஃபலாஹி கூறியுள்ளார்.
 
    அதேவேளையில் காலித் முஜாஹிதின் மரணம் குறித்து உ.பி உள்துறைச் செயலாளரும், கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரலும் அடங்கிய உயர்மட்டக்குழு விசாரணையை துவக்கியுள்ளது

0 comments:

Post a Comment