Friday, June 7, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு- என்.ஐ.ஏ!

                                    6 Jun 2013 NATIONAL INVESTIGATION AGENCY OF INDIA
 
     புதுடெல்லி: முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது. மஹராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், மத்தியபிரதேசத்தில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹராஷ்ட்ரா மாநில நந்தத்தில் நிகழ்ந்த வெடிக்குண்டை தயாரிக்கும்போது  ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ஹிமான்ஷு பான்ஸேவும், நரேஷ் ராஜ் கோண்டோவாரும் கொல்லப்பட்ட சம்பவத்தை பரிசோதித்த பிறகு என்.ஐ.ஏ இம்முடிவுக்கு வந்துள்ளது.
 
    பான்ஸே உள்ளிட்ட மஹ்ராஷ்ட்ராவைச் சார்ந்த 4 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள பாக்லியா காட்டில் நடந்த ஆயுத பயிற்சியில் பங்கேற்றதாக 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் விபரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைக்கவில்லை. 2006-ஆம் ஆண்டு பான்ஸே, மத்திய பிரதேசத்தில் வைத்து சுனில்ஜோஷியை சந்தித்துள்ளான் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
     2003 நவம்பர் 21-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பார்பானி, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பூர்ணா, ஜால்னா ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதுகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பான்ஸே தலைமை வகித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு மாலேகானில் தொழுகையின் போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இவ்வழக்கில் மனோகர், டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment