Friday, June 7, 2013

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு:விரைவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

6 Jun 2013
 
     புதுடெல்லி:கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இந்த வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
 
     சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் மறுப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், இது புதிய விஷயம் அல்ல. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம் என்றார்

0 comments:

Post a Comment