Thursday, March 14, 2013

எதிர்கட்சி தலைவர்கள் மீதான விசாரணை: தீர்ப்பாயத்திற்கு எதிராக பங்களாதேஷில் எதிர்ப்பு வலுக்கிறது!

                      14 Mar 2013 எதிர்கட்சி தலைவர்கள்
 
     ரியாத்:எதிர்கட்சித் தலைவர்களிடம் விசாரணை நடத்த பங்களாதேஷ் அரசு ஏற்படுத்திய போர்க்குற்ற தீர்ப்பாயத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
 
     பங்களாதேஷ் அரசையும், எதிர்கட்சிகளையும் நல்லிணக்கத்தின் பாதையில் கொண்டுவரவோ, தீர்ப்பாயத்தில் வெளிப்படையான விசாரணையை உறுதிச் செய்யவோ ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசன்(ஒ.ஐ.சி) சர்வதேச தளத்தில் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று பிரபல சட்டவல்லுநர் டோபி எம்.காட்மன் வலியுறுத்தியுள்ளார்.
 
     சர்வதேச அங்கீகாரமில்லாத பங்களாதேஷின் போர் குற்ற தீர்ப்பாயம், சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் நிபந்தனைகளை மீறுவதாக காட்மான் அரபு நியூசுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “பங்களாதேஷ் பொறுமையின் தேசமாகும். அதன் இறந்த காலத்தை மறந்துவிட்டு அமைதிக்கான எதிர்காலத்தை தாங்கள் நோக்குகிறோம்” என்பது தற்போதைய பிரதமர் ஷேக் ஹஸீனாவின் தந்தை முஜீபுர் ரஹ்மான் கூறிய வார்த்தைகளாகும்.
 
    விடுதலைப்போர் தொடர்பாக 1973-ஆம் ஆண்டு துவங்கவேண்டிய விசாரணையை தவிர்த்தது முஜீபுர்ரஹ்மானின் இந்த சித்தாந்தம் தான் காரணம். சர்வதேச அளவுகோல்களை மதித்தே தீர்ப்பாயத்தின் விசாரணை நடக்கவேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர்களை கொலைச் செய்வதை தடுப்பதற்கு சர்வதேச ஆதரவை திரட்டவே நான் சவூதிக்கு வருகை தந்துள்ளேன்.
 
     இஸ்லாமிய தலைவர்களுக்கு வெளிப்படையான விசாரணையை உறுதிச் செய்ய சவூதி அரேபியாவும், பங்களாதேஷுக்கு உதவும் இதர அரபு நாடுகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்று காட்மான் வலியுறுத்தியுள்ளார்.
 
     சர்ச்சைக்குரிய தீர்ப்பாயத்தின் விசாரணை நடவடிக்கைகளில் ஆம்னஸ்டி இண்டர்நேசனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், சர்வதேச பார் அசோசியேசன், ஐ.நா மனித உரிமை ஹைக் கமிஷன் ஆகியன கவலை தெரிவித்திருந்தன.

0 comments:

Post a Comment