Saturday, March 23, 2013

நெல்லையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் தொடர்முழக்க போராட்டம் : கேம்பஸ் ஃப்ரண்ட் பங்கேற்ப்பு

                           

     2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என லட்சக்கனக்கானோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்.இறுதிப்போருக்கு பிறகும் மனித உரிமை மீறல்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் அவலமும் தொடர்கின்றது.



     இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா வின் மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே மற்றும் இலங்கை அரசின் மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும்,அத்துடன் தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
     அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளை பேருந்து நிலையம் அருகில் இன்று அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை திரட்டிய கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஒன்று கூடினர். அங்கு ஈழ விடுதலைக்காகவும், ஐ.நா சபையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் முழக்கங்களை எழுப்பினர் இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாயை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மேலும் ஈழ தமிழர்களுக்கான தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment