Wednesday, March 13, 2013

பாகிஸ்தான் – ஈரான் இடையேயான எரிவாயு திட்டம் துவக்கம்! அமெரிக்கா மிரட்டல்!

                           12 Mar 2013 Pakistan-Iran gas pipeline inaugurated defying US opposition
 
     இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மற்றும் ஈரானின் அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர். பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக் குறையைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
     இந்நிலையில் இத்திட்டத்தால் எரிச்சல் அடைந்துள்ள ஏகாதிபத்திய அமெரிக்கா, பாகிஸ்தானின் உடனடி எரிசக்திப் பற்றாக்குறையை இது தணிக்காது என்றும், ஈரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
 
     இந்த இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய , ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத், இந்த எரிவாயுக் குழாய்க்கும் அணு சக்தித் திட்டத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
 
     ஈரான் இத்திட்டத்தில் அதன் பங்கை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அதன் பகுதிக் கட்டுமானத்தை இன்னும் தொடங்கவில்லை. இத்திட்டம் முன்பு ஈரானிய எரிவாயுவை, பாகிஸ்தானைத் தவிர, இந்தியாவுக்கும் கொண்டு செல்வதாக இருந்தது. ஆனால் இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து அரிய வாய்ப்பை நழுவவிட்டது.

0 comments:

Post a Comment