Friday, March 22, 2013

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது!

                   22 Mar 2013 sri lanka geneva resolution unhrc
 
     ஜெனீவா:ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன.
 
     இறுதிக் கட்டப்போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் கவலைகள் உருவாகி வருகின்றன.
 
     போருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

0 comments:

Post a Comment