Saturday, March 16, 2013

இப்ராஹிம் ராவுத்தரை மறந்தது ஏன்? - விஜயகாந்துக்கு தேமுதிக எம் எல் ஏ கேள்வி!


    தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மீதும், தேமுதிக கட்சி மீதும் தேமுதிக சட்ட மன்ற உறுப்பினரும், திரைப்படத் தயாரிப்பாளருமான மைக்கேல் ராயப்பன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.


      தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஐந்துபேர் சட்டமன்றத்திலும் அரசியல் அரங்கிலும் ஜெயலலிதா சார்பு நிலை எடுத்துள்ளதை விமர்சித்த தேமுதிக மகளிர் அணித் தலைவி பிரேமலதா "உதிர்ந்த ரோமங்கள்" என்று அந்த ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள மைக்கேல் ராயப்பன் "மதிகெட்டவர் தலையில் முடியாக இருப்பதைவிட உதிர்ந்துபோவது மேல்" என்று பதிலளித்துள்ளார்.
 
     கணவர் கட்சிக்கு தலைவர், மனைவி மகளிர் அணிக்கு தலைவி, மச்சான்  
இளைஞர் அணிக்கு செயலாளர். இப்படி குடும்ப கட்சியாக செயல்படுகிற இவர்களின் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்த 2006 சட்ட மன்ற தேர்தல் வேட்பாளர்களின் இன்றைய நிலை என்ன? சொத்து சுகங்களை விற்று வீடு வாசலை அடகு வைத்து போட்டியிட்ட வேட்பாளர்களில் எத்தனையோ பேர் இன்று கடனாளியாக தத்தளித்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு அலைகின்றனர் என்பதை இவர்கள் அறிவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

     விலை பட்டியல் போட்டு வைத்து கொண்டு வியாபாரம் செய்தது என்பது எதை விற்றதுக்கு சமம்? கிளை செயலாளர் பதவி முதற் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வரை விலைபேசி வியாபாரம் செய்தது யார்? என்றெல்லாம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ள மைக்கேல் ராயப்பன், "நன்றியைப் பற்றி பேசுகிற நீங்கள் (பிரேமலதா), இப்ராஹிம் ராவுத்தரை மறந்தது ஏன்?" என்றும் கேட்டுள்ளார். thanks, asiananban

0 comments:

Post a Comment