Friday, August 31, 2012

அதிரையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி....


அதிரையை அடுத்த  பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளி.

இவர்கள் அதிரை,தம்பிகோட்டை, முத்துபேட்டை  போன்ற  சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள்.

இவ்வாறு வேட்டையாடுவதற்காக தங்களுடைய லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை கணேஷ் என்பவர் எடுத்து அதில் வெடி பொருட்களை நிரப்ப துடைத்துக்கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராமல் தனது கை பிஸ்டல் மீது பட்டுவிட்டது. அதில் இருந்து சீறிப்பாய்ந்த துப்பாக்கி குண்டு எதிரே நின்ற அவருடைய நண்பர் தங்கவேலின் மார்பில் பாய்ந்தது. இதில் மார்பிலிருந்து ரத்தம் வந்த நிலையில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து   பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து அதிரை  காவல் துறை அதிகாரி செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

நமதூரில் புதிதாக திறந்துள்ள '24 மணி நேர மருந்தகம்'



அதிரையில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. டாக்டர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளன. இதற்காக அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன.

அதிரை மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமைந்துள்ளது நமதூரில் புதிதாக திறந்துள்ள '24 மணி நேர மருந்தகம்'

24 மணி நேர மருந்தகத்தின் சிறப்புகள் சில:

1. 24 மணி நேர மருந்தகச் சேவை

2. முதலுதவிக்கென்று தகுதியுள்ள செவிலியர் ( நர்ஸ் )

3. இலவச டோர் டெலிவரி

4. வெளிநாட்டில் வாழும் உள்ளூர் சகோதரர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச டோர் டெலிவரி வசதி.

5. விரைவில் தகுதியுள்ள டாக்டர்களை மருந்தகத்திலே பணி நியமனம் செய்வதற்கு முயற்சித்தல்.

போன்ற சேவைகளுடன் அதிரை மக்களின் நல்ல ஒத்துழைப்பை பொறுத்தே தங்களின் மருத்துவ சேவைகள் தொலை நோக்குப் பார்வையுடன் மேலும் வலுப்படுத்தப்படும்' என அதன் உரிமையாளர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ் 

Thursday, August 30, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பெண்கள் பயானுக்கு தடை!


நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் மௌலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் ஆயிஷா மகளிர் அரங்கத்தின் நிர்வாகியும், அதிரை பேரூராட்சி தலைவருமாகிய சகோ. அஸ்லம் அவர்கள் தான் வசிக்கும் முஹல்லாவிற்கு உட்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, August 27, 2012

Flash News இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை அறிவிப்பு!

இமாம் ஷாஃபி பள்ளி நாளை(28-08-12.செவ்வாய்) விடுமுறை என அவசர அறிவிப்பு செய்துள்ளனர். இந்த விடுமுறை LKG முதல் 5ம் வகுப்பு வரை மட்டும். என்று அதிரை போஸ்ட்டிடம் தெரிவித்தனர்.

Saturday, August 25, 2012

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் எஸ்.டி.பி.ஐ – மு.க.ஸ்டாலின் பாராட்டு!


சென்னை:ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
தி.மு.கவுக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே உறவு தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ அல்ல. இந்த உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் உறவு. ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த முஸ்லிம் சமுதாயத்தோடு நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் இயக்கம் தி.மு.க.நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் தலைவர் கருணாநிதி ஆவார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ இருந்து வருவது பாராட்டுக்குரியது. இன்று மத்திய-மாநில அளவில் எத்தனையோ பிரச்சனைகள், இலங்கை தமிழர் பிரச்சனை, சேது சமுத்திர திட்ட பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, எல்லாவற்றிற்கும் மேலாக விலைவாசி உயர்வு பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ திகழ்கிறது.
தமிழகம் எத்தனையோ தேர்தல்களை பார்த்தது உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கட்சி கூட்டணி முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது தி.மு.கவும், முஸ்லிம் லீக்கும்தான். 1962-ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. 1967-ஆம் ஆண்டு தொடர்ந்து கூட்டணி நீடித்து அதன் காரணமாக தி.மு.க ஆட்சியையும் பிடித்தது. இப்படி முஸ்லிம் சமுதாயத்துடன் தி.மு.க தொடர்ந்து உறவு வைத்து வருகிறது. அந்த உறவு எஸ்.டி.பி.ஐ மூலமாக மேலும் வளரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் மெளலவி ஏ.இ.அப்துல் ரஹ்மான், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களை எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது வரவேற்றார். இறுதியில் எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் நன்றி நவின்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)


ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)


Friday, August 24, 2012

Wednesday, August 22, 2012

'மருதாணி' வதந்தியை பரப்பியவர்களை பிடிக்க தனிப் படை.....


மருதாணி வதந்தியை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி முஸ்லிம்களிடையே பீதியைக் கிளப்பிய சதிகாரனைக் கண்டுபிடிப்பதற்காக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.
“இப்படி பீதியைக் கிளப்பியவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகளை அமைத்துள்ளோம். வெகு விரைவில் அவர்கள் பிடிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி அல்லது ஆம்பூரிலிருந்து இந்த எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
“ரெட் கோன் என்ற மெஹந்தியை ஒரு சிறுமி கையில் இட்டதும் அவளது கைகளும், கால்களும் புண்ணாகி விட்டன. எனவே மருத்துவர்கள் அவளது கைகளையும், கால்களையும் துண்டித்து விட தீர்மானித்தனர்” என்று அந்த எஸ்.எம்.எஸ். தெரிவிக்கின்றது.
இந்தச் செய்தி எந்த அடிப்படையுமற்றது, மக்களிடையே பீதியைக் கிளப்பும் ஒரே நோக்கத்தில் இது பரப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்தனர்.
இந்த எஸ்.எம்.எஸ்.கள் பரவியதுமே மருதாணி இட்ட இரண்டு பெண்கள் இறந்துவிட்டதாகவும், ஒரு சிறுமியின் கைகள் செயலிழந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.
இந்த வதந்தியையொட்டி பல அரசு மருத்துவமனைகளில் பெண்களும், குழந்தைகளும் குவியத் தொடங்கினர். சிலர் கையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இது மனோரீதியாக பாதிப்பு ஏற்பட்டதன் விளைவு என்று மருத்துவர்கள் கூறினர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்தவமனை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் சென்று பெண்களையும், குழந்தைகளையும் சமாதானம் செய்தனர்.

Monday, August 20, 2012

மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பரபரப்பு!


மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.

பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை அல்லாஹு அக்பர்....

Sunday, August 19, 2012

விடைபெறும் கஞ்சி வாளிகள்! அதிரை ரமழான் படங்கள்


முப்பது நாட்களாக நமதூரின் பெரும்பாலான பள்ளிகளில் விநியோகித்து வந்த நோன்பு கஞ்சிக்கு  இன்று முதல் பிரியா விடை கொடுக்கப்படுகிறது... 




அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடமும்....
இடம் தக்வா பள்ளி .
நன்றி:அதிரைகுரல்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!


கலவரத்தால் பாதிக்கப்பட்ட
அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!

அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, மேலும் 149 முகாம்களில் அகதிகளாய் இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளின் கண்ணீர் துடைத்திட….
பெருநாள் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் வசூல் செய்யும் சகோதரர்களிடம் தாராளமாக வழங்கவும்.
இவண்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்,
தொடர்புக்கு: 9842716214, 9524278081.

ரமலான் இறுதி ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)


ரமலான் இறுதி ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்


புதுமனை தெரு நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (புகைபடங்கள்)


ரமலான் மாதத்தில் நமதூர் இளைஞர்கள் பல இடங்களில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமதூர் புதுமனை தெரு இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் இருனூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அபூபக்கர் சித்தீக் அவர்கள் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக வரும் பெருநாள் அன்று இந்தியா முழுவதும் பெருநாள் தொழுகை நடக்கும் இடங்களில் நிதி வசுல் செய்யப்பட உள்ள்து. இதில் தங்களால் இயன்ற.நிதியினை தாராளமாக வழங்குமாறு கேட்டுகொண்டார்கள்.

Saturday, August 18, 2012

அஸ்ஸாமில் மீண்டும் கலவரம்.......


கொக்ராஜர்:அஸ்ஸாமில் கொக்ராஜரில் மீண்டும் உருவான கலவரத்தில் ஒன்பது பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.  காமரூப் மாவட்டத்திலும் கலவரம் பரவியுள்ளது.
கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து இங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமரூப் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. பக்ஸாரில் இருந்து ரங்கியாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று காந்திபாரியில் வைத்து புதன்கிழமை இரவு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் ஷாஹிதுல் ஹுஸைனை காணவில்லை. தகவல் அறிந்த ஊர்மக்கள் ரங்கியாவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். வியாழக்கிழமை ரங்கியா எஸ்.டி.ஒ பர்ணாலி தேகாவின் காரையும் தாக்க முயற்சி நடந்தது. இதுத்தொடர்பான வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்து வானை நோக்கி சுட்டனர். எஸ்.டி.ஒ பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குவஹாத்திக்கு சென்றுக்கொண்டிருந்த ஒரு பேருந்தையும், தேசிய பாதையில் சிக்கிய ஏராளமான வாகனங்களையும் கேகாஹந்தியில் ஒரு மரப்பாலத்தையும் வன்முறைக் கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது.
உயர் மாவட்ட அதிகாரி அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். காம்ரூப் மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Thursday, August 16, 2012

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?




மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் ச
ந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

-சதிஸ் செல்லதுரை
எல்லை படை அதிகாரி-

தகவல்:tamilmottu.blogspot.in
 

ரமலானின் கடைசி ஜூம்ஆவில் குத்ஸ் தினத்தை அனுஷ்டிப்போம் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வேண்டுகோள்!


உலக வரைபடத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு,
தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம்,
தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து
கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு.
இப்படி தேவையற்ற பல சிறப்புகளை பெற
்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின்
முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து
வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம்.
அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இன்று பச்சிளம்
பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை
பாதுகாப்பதற்கõகவும் ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள்
போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை
இலட்சக்கணக்கான உயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள்,
சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர்.
ஃபலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும்
வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ்
தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானித்தனர்.
ஃபலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான சிறப்புரைகள், ஊர்வலங்கள் மற்றும்
பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும்
ஜரோப்பிய நாடுகளில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில்
கிறிஸ்தவர்களும் யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.



ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும்
குறைவாகவே உள்ளது. ஃபலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும்
வெறும் ஃபலஸ்தீன பிரச்சனை என்றோ அல்லது அரபுக்களின் பிரச்சனை என்ற அளவில்
சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஃபலஸ்தீன பூமி
நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின்
முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான
மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி
வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும்
பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும்
சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்ற வேண்டும்.



இந்த வருட ‘அல் குத்ஸ் தினத்தில்’ போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன
மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் ஃபலஸ்தீன
போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள்
மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க
வேண்டும். புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம்
ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம்.
ரமலானின் கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 17 ஜூம்ஆ பயான்களிலும் இரவுத்
தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும் பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன்
அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம்
ஏந்தி பிரார்த்திப்போம் என பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஸ்லிம்
உம்மத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச அல்குத்ஸ் தினம்: ஆகஸ்ட் 17, 2012 (ரமலானின் கடைசி வெள்ளி)

பர்மாவில் 8 லட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - சவூதி அரேபியாவில் நடந்த மாநாட்டில் ஆய்வு...............!!


 
சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் இரண்டு நாள் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி மன்னருமான அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்,

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நஜாத் அவர்கள் உட்பட இஸ்ல
ாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்,

ஆரம்பமாக மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்போவதாக இக்சானொக்லு குறிப்பிட்டார், மியன்மாரில் தொடரும் இன வன்முறையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அவர்களை மையமாக வைத்து பல சுற்றுகள் பேசப்பட்டது, மேலும் அஹமதி நிஜாத் அவர்கள் கூறுகையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை தெளிவாக விவரித்திருந்தார், முன்னதாக அவர் திங்களன்று புனித நகரான மதீனாவுக்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அஹமதி நிஜாத் அவர்கள்.... இன்றைய உலகம் மிகவும் நுட்பமான நிலையில் இருப்பதாக எதிரி நாடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்,

சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த கூட்டமைப்பின் அவசர கூட்டமாகவே இந்த மாநாடு இடம்பெறுகிறது, இந்த மாநாட்டுக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் இம்மாத ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு முன்னர் 1997 (பாகிஸ்தான்), 2003 (கட்டார்), 2005 (சவூதி) ஆகிய ஆண்டுகளிலும் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் நாடுகளில் அரசியல் பதற்றம், வன்முறைகளுக்கு மத்தியிலேயே இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் போது விமானத்தில் வந்த அனைத்து நாட்டு தலைவர்களும் நேரடியாக மாநாடு நடைபெறும் அரச அரண்மனைக்கு வருகை தந்தனர், அரண்மனையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மாற்றி விடப்பட்டது, அரண்மனையை சுற்றி பல அடுக்கு பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

Tuesday, August 14, 2012

பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம் !


டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.தகரம் மற்றும் புற்களை உபயோகித்து கட்டப்பட்டிருந்த மஸ்ஜிதின் மீது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியது. இவ்வேளையில் மஸ்ஜிதில்
35க்கும் மேற்பட்ட மக்கள் ரமலானின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர். 13 பேரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.
thanks to asiananban

யார் வந்தேறிகள்?


அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

இங்கு உள்ள பிரச்சனைதான் என்ன? இந்த அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பற்றி எரியவில்லை, மூன்று மாவட்டங்களில்தான் பிரச்சனை வெடித்துள்ளது. அதிலும் இராணுவம் உடனடியாக களத்திற்கு வராததுதான், இந்த பிரச்சனை எல்லை மீறிய வன்முறையாக மாறுவதற்கு காரணம். ஆனால் அம்மாநிலத்தின் முதல்வர் தருண் கோகாய், இங்கு நடைபெற்று கொண்டிருப்பது “இன பிரச்சனைதான்” என்று கூறியுள்ளார்.
மற்றும் இந்திய தேசத்தில் இருந்தது முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளவர்களில் ஒருவரான அத்வானி, “வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் இவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்” என்று தன் திருவாயில் இருந்து மொழிந்துள்ளார். இதனையே இவர்கள் பன்னெடுங்காலமாக கூறி வருகின்றனர்.
கூட்டணி குழப்பங்கள், உள்கட்சி குழப்பங்கள் என்று திணறி வரும் பா.ஜ.க.விற்கு, இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.    பழங்குடி இன குழுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் போடோ பிரிவினை வாத குழுக்கள் இவர்களின் சவாரிக்கு பயன்படுகின்றனர்.
அஸ்ஸாம், மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து வருகின்றனர். தங்களை இந்தியர்கள் என்று நிருபிக்க, இவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்யை காரணமாக வைத்தே இந்த அப்பாவி முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தும், அவர்களின் உயிர்களை வன்முறை மூலம் பறித்தும் வருகின்றனர்.
இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் எப்போது வந்தார்கள்? இராணுவம், எல்லை பாதுகாப்பு படை, உளவுத்துறை என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு இத்தனை பேர் எப்படி ஊடுறுவினார்கள்? என்ற கேள்விகள் எழுவது இயல்புதானே. ஆனால் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமாக உள்ளது. அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக வங்காளதேசத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து சென்றது, அப்போதைய ஆங்கில அரசு. அவற்றில் பெருன்பான்மையினர் முஸ்லிம்கள். ஏறத்தாள ஒரு நூற்றாண்டிற்கு முன் சென்றவர்களைதான் இன்னும் ஊடுருவல்காரர்கள் என்று கூறுகின்றனர் இந்த குறுமதியினர். இவர்கள் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த அத்வானி எந்த ரகம்? இதே அளவுகோலை வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கும் ஏன் பயன்படுத்தவில்லை?
அப்பாவிகளை அடித்து அதில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றன போடோ குழுக்கள். ஆயுதங்கள் தங்கு தடையின்றி அவர்களிடம் புரள்கின்றன. இதற்கு மாநில அரசும் உடந்தை, இந்த போடோ குழுக்கள் அரசிலும் பங்கு வகிக்கிறது. முஸ்லிம்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு இந்த உண்மையான பிரிவினைவாதிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பிரிவினைவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கவில்லை, சில வருடங்களுக்கு முன்னர் இதே அஸ்ஸாமில், பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. இதே போன்ற குறுமதியினர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் உள்ளனர். பரந்து விரிந்த நாட்டில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் வேலை பார்க்கக் கூடாது என்று கூறுவது வடிகட்டிய முட்டாள்தனம். இவர்களின் முட்டாள்தனத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய தேசத்தை துண்டாக்கி விடுவார்கள். அதன் பிறகு “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது பாட நூல்களில் மட்டும்தான் இருக்கும்.
சிந்தனைக்கு

Monday, August 13, 2012

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு என தனியான நகரம்



சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

thanks to jaffnamuslim

Sunday, August 12, 2012

பயான் நேரலை நேரம் மாற்றம்..............

அஸ்ஸலாமு அழைக்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான்  நமதூர் சித்திக் பள்ளியிலிருந்து தினந்தோறும் இரவு 10:50 மணிக்கு நமது அதிரை தண்டர் இணைய தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்...

Saturday, August 11, 2012

அதிரையில் பயங்கரம் : ஜாமீனில் வந்த வாலிபர் கொலை


அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(47) மீனவர், இவரது மகன் அரவிந்தன்(21), அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல் வம் மகன் மாரிமுத்து(21).

அரவிந்தனும், மாரிமுத்துவும் நண்பர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் திருவிழாவுக்காக டிஜிட்டல் போர்டு வைப்பது தொட ர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதை ராமகிருஷ்ணன் தட்டிக்கேட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 28&8&11ல் ராமகிருஷ்ணனை வெட்டிக்கொன்றார். இந்த வழக்கில் மாரிமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வந்தார். 

இனி அதிரையில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என கருதிய மாரிமுத்து குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு குடிபெயர்ந்து விட்டனர். அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரேஷன் கார்டை தொண்டி முகவரிக்கு மாற்றவேண்டும் என நேற்று மாரிமுத்து அதிராம் பட்டினம் வந்தார்.

இதற்காக அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரியை பார்த்து விட்டு இரவு 9.30 மணிக்கு ஊர் திரும்புவதற் காக கிழக்கு கடற்கரை சாலை பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்.
இதை தெரிந்து கொண்ட அரவிந்தன் தனது நண்பர்கள் கிருஷ்ணகுமார்(21), கணேசன் ஆகியோருடன் அங்கு வந்து மாரிமுத்தை தாக்கி னார். 3 பேரும் சேர்ந்து கைகளால் அடித்து உதை த்தனர். அந்த பகுதியில் கிடந்த ஹாலோ பிளாக் செங்கல், கருங்கற்களை எடுத்து முகம், தலையில் சரமாரியாக அடித்தனர். இதில் மாரிமுத்து முகம் சிதைந்தது. மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
குற்றுயிராக அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். மாரிமுத்து செத்து விட்டார் என கருதிய 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது மாரி முத்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை அதிரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த அதிரை இன்ஸ்பெக்டர் செங்கமல கண்ணன் மற்றும் போலீ சார் இரவோடு இரவாக அரவிந்தன், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறை வான கணேசனை தேடி வருகிறார்கள்.பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அதிரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Friday, August 10, 2012

குடிபோதையில் ரகளை செய்த அதிரையர் கைது !


எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் மண்ணடியில் நேற்று இரவு மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் எதிரே உள்ள ஒரு பெட்டிகடையில் அதிரையை சார்ந்த ஒரு இளைஞர்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இவர் குடிபோதையில் உள்ளதை கண்ட அந்த கடையின் முதலாளி விட்டு விட்டார் .

மீண்டும் அருகில் உள்ள பால் கடைக்கு சென்று ஒரு பாதம் பால் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அவரிடம் தகாத வார்த்தைகளை சொல்லி வம்பிளுத்துள்ளர் இதனால் ஆத்திரமடைந்த அந்த கடையின் முதியவர் லேசாக தட்டியுள்ளார் .

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி அந்த முதியவரை போட்டு பலவந்தாமாக தாக்கியதில் பலத்த காயமடைதார் இதனால் இரத்தம் தாரை தாரையாக ஓடியதை கண்ட பொதுமக்கள் இவரை பிடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போதை ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

கயாம்பட்ட அந்த முதியவர் காயல்பட்டினத்தை ஒரு இதய நோயாளி அவர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த கடையின் ஊழியர் தெரிவித்தார் .

பையனின் எதிர்கால நன்மை கருதி மேலதிக விபரங்கள் பதியவில்லை இனிமேல் இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்டு தனக்கும் தனது ஊருக்கும் இழுக்கை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்காமாகும்.
தகவல்: அதிரை புதியவன்

கற்பா? கல்லூரியா?


ம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.
குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறிகொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆட்டோ அல்லது வேன் பயணம்
சிலர் தங்களது பருவடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோ அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தை களை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுகள்.
பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாய பெண்கள் வெளியே வருகின்றனர். வாசலில் ஆட்டோவுடன் காத்தி ருக்கின்றான் ஆட்டோ ஒட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமல் கலர் கலர் பேண்ட சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.
பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங் களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகிறது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்றவரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான். மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பிள்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை.
மறுநாள் காலையில் அதே சொகுசு பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்த கல்லூரிப் படிப்பு தேவையா என்று!
ஆட்டோ, வேண் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டி ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப்புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்புக் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தைகெட்ட நடத்துனர்களும், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.
பட்டபடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டி பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சி குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று.
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப்பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகை யிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றொர்கள் சிந்திக்க வேண்டும்.
பாடமா? படமா?
ஊயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்வி விட்டு, பாய் பிரண்ட்ஸ்வுடன் திரையரங்களுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின் றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக்களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதை காமகளியாட்டம் என்று வெறுக்கின்றர்களோ அதை தற்போதுள்ள சினிமாக் களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும். கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நிணைப்போம். இப்போது நிணைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?
பிற மதத்தவருடன் காதல் பயணம்
கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத் துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பறிக்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வர்று கூறுகையில் நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடியப் பாவமாகும்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:217)
ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்
இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! நம்முடைய பிள்ளைகளை நரகபடு குழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.
தமிழகத்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஒடுவது சர்வசாதாரணமான ஒன்றாகி விட்டது.
பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர். பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர். பள்ளிப்படிப்புக்கே இந்த கதி என்றால் கல்லூரிப் படிப்புக்கு என்ன கதி?
ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பென்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜூகேஷன் முறையை கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?
பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாய பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும்; இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது வல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.
அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாய பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின் றனர். சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்பு கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409)
இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும்போது சாதகங்களை விட பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளை படிக்க வைக்க வேண்டுமானால்….
குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உள்ளுராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லுஸரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) தப்ரானி)

இந்த பெண்கள் ஆட்டோ அல்லது வேளில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர் களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.
ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்புப் படித்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதை விட சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாகரத்தில் போய் முடிகின்றது.
எனவே, இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோhர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்த தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களை பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கன் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கி விடக்கூடாது.இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்துக் கொண்டிருப்பவை. இந்த தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.