Sunday, July 22, 2012

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முஹம்மது ஷரஃபுதீன் பாகவீ

சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரை  மற்றும் மத்திய அரசின் வழி காட்டுதல்படி சென்ற 24 -11 -2009  அன்று தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவு ( 21/2009 ) சட்டததைக் கொண்டு வந்துள்ளது. இது முஸ்லிம்களின் நலன்களைப் பாதிப்பதாகவும் இந்திய அரசமைப்புச் சட்டம் சிருபான்மைனருக்கு வழங்கியுள்ள (Muslim Personnel Law ) முஸ்லிம் தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. அத்துடன் முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்தப் பதிவு தேவையில்லாத ஒன்றுமாகும். ஏனெனில்........

திருமணங்களைப்  பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிக நம்பகமான முறையிலும் சந்தேகத்துக்கு இடம்மில்லாத வகையிலும் பதிவு செய்யப்பட்டு அவை பாதுகாத்தும் வைக்கப்படுகிறன. சிலநுறு வருடங்களுக்கு முற்பட்ட பதிவேடுகள் கூட இன்றும் உள்ளன. அல்ஹம்துளில்லாஹ்!

தேவைப்படும் நேரங்களில் மஸ்ஜிதுகள் அல்லது காஜிகள் மூலம் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் போதுமானவையாகவும், அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களாவும் ஏற்றுக்கொள்ளாப்படுகின்றன.

பிற பதிவுகளை விட முஸ்லிம் களின் நடைமுறையில் உள்ள பதிவு முறை பாதுகாப்பானதும் நம்பகத்தன்மை  வாய்ந்ததுமாகும். ஏனெனில் மணமகள் அல்லது மணமகள், தான் வசிக்கும் மஹல்லா ஜமாஅத்தின் திருமண அனுமதிச்  சீட்டு ( இஜாமீஸத் நாமா) பெறாவிட்டால் அவர்களுக்கு எங்குமே நிகாஹ் செய்து வைக்கப்படுவது இல்லை , நிகாஹ் தஃப்தரே  கூட தரப்படுவதில்லை என்பதே உண்மைநிலை, இதன் காரணமாக, திருமணம் நடைபெற்று பதிவு செய் யப்பைட்ட பின் கணவன் உயிருடனிருக்கும் நிலையில் அவனுடைய மனைவி வேறு எங்கும் சென்று திருட்டுத்தனமாக நிகாஹ் செய்து கொள்ளமுடியாது. மாறாக ரிஜிஸ்டர் திருமணம் செய்பவர்கள் பல்வேறு இடங்களில் பல திருமனங்கள் செய்து ரிஜிஸ்டரும் செய்கிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் நடைமுறை படுத்தி வரும் பதிவில் எவ்வித முறைகேடும் குறைபாடும் இல்லை அதே சமயம் கட்டாய திருமணப் பதிவுச்சட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை. எங்கோ நடக்கின்ற ஒருசில தகாத நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒரு சில திருட்டங்களோடு இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது கூட ஏற்கத்தக்கதலல். இந்த கட்டாயப் பதிவுச்சட்டம் இந்திய அரசமைப்புச்சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதும் அந்த உரிமையைப் பறிப்பதுமாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்தச் சட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள்:     
1. இரண்டு திருமணம் செய்த ஒருவர், இரண்டில் ஒன்றை மட்டும் ரிஜிஸ்டர் செய்து, மற்றதைப் பதிவு செய்யாவிட்டால் இரண்டாவது மனைவி மூலம் பிறக்கும் குழந்தைகள் அவனுடைய வாரிசுகளாக ஆகமுடியாது என்று நிலை ஏற்படும்.

2. ரிஜிஸ்டர் செய்த பின் தலாக் அல்லது குலா ஏற்பட்டாலும்  அவர்களை அரசாங்கம் கணவன் மனைவி என்றே கருதும்.

3. செல்லுபடியாகாத (ஃபாஸிதான) நிகாஹ் ஆக இருந்ததால் அதை ஃபஸ்கு செய்வது - முறிப்பது சிரமமாகிவிடும்.

4. ஷாரீஅத் அனுமதித்துள்ள இரண்டாவது அல்லது முன்றாவது அல்லது நான்காவது திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போது பல்வேறு நிபந்தனைகளைச் சேர்க்கும் நிலையை இச்சட்டம் ஏற்படுத்தலாம்.

5. சில காரானங்களைக் காட்டி திருமணத்தைப் பதிவு செய்ய, பதிவாளர் மறுத்தால், முஸ்லிம் கணவன் - மனைவி, அரசின் பார்வையில் திருமணம்  ஆகாதவர்களாகவே கருதப்படுவார்கள் அதனால் அவர்களின் குழந்தைகள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

6. இச்சட்டம் ஆலிம்களிடமிருந்தும் ஜமாஅத்துகளிடமிருந்தும் முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பதற்கான பயங்கரச் சதியாலோசனை போல் தோன்றுகிறது. காலப்போக்கில் முஸ்லிம்கள், மஸ்ஜிதில் நிகாஹ் செய்வது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஜமாத்தில் அனுமதி பெறுவது ஆகியவற்றை வீண்வேலை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

7. ஒவுவொரு ஊர் ஜமாஅத்தும் கப்ருஸ்தானில் இடம் தருவது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஆகிய இரண்டு விஷயங்களினால் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, புதிய கட்டாயப் பதிவுசட்டததை அமல்படுத்தினால், ஜமாஆத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முஸ்லிம்கள் விலகிவிடும் அபாயம் உள்ளது.

8. (சகோதரிகள் போன்ற) மஹ்ரமானவர்களைத் திருமணம் செய்து ஹராமான வாழ்க்கை நடத்த இச்சட்டம் துணைபுரிவும்.

9. அங்க அடையாலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் கூறுவதால்,  கணவன் மனைவி ரிஜிஸ்டர் ஆபீசுக்குச் செல்லாவேண்டிய நிலை ஏற்பட்டு, பர்தா இல்லாத சூழ்நிலையும் குழப்பமும் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.

10. தலாக் ஏற்பட்டுவிட்டால், சீர்சாமான்கள், நகைகள் போன்ற பொருட்களை திருப்பிக் கொடுப்பதற்கு வசதியாக, திருமணச் செலவு எத்தனை, நகைகள் எவ்வளவு சீர்சாமான்களின் விலை எவ்வளவு என்பதையெல்லாம் குறிப்பிட வேண்டும் எனக் கூறி அவற்றின் மொத்தத் தொகைக்கு ஏற்ப ரிஜிஸ்டர் கட்டணம் விதிக்கப்படும் நிலையம் வரலாம்.

11. ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்ய ரூபாய் 100.00  தான் கட்டணம் என்றாலும் ரிஜிஸ்டர் செய்வடர்காகச் செய்ய வேண்டிய செலவுகள், 'கவனிக்கவேண்டிய அன்பளிப்புகள்' ஏராளம், ஏராளம். இது ஏழைகளின் இடுப்பை ஒடிக்கும் சுமையாகும்.

12. இது தவிர, பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள், படிப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் பல சான்றிதழ்களை அரசு கேட்கும் சூழ்நிலை ஏற்படலாம். அது மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

13. 18/21 வயதை விடக் குறைந்த வயதுடைய மாமகள் மணமகனுக்குக் கடுமையான சிக்கல் ஏற்படும்.

மேற்கூறப்பட்ட காரணங்களால், நாம் நிகாஹ் தஃபதரில் பதிவு செய்யும் முறையே சிறந்ததும் பாதுகாப்பானதும், சிரமம் இல்லாததும் சரியானதும் போதுமானதுமாகும், இதைவிட்டு விட்டு வேறொருபதிவு தேவையில்லாததாகும். இதுவும் வேண்டும் அரசுப் பதிவும் வேண்டும் என்பது அறிவார்ந்த கருத்துமல்ல.எனவே திருத்தத்துடனோ திருத்தமில்லாமலோ இந்த கட்டாயப் பதிவுச் சட்டம் இஸ்லாமிர்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத ஒன்றாகும். ஒன்று இந்தச் சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும், அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்காவது இதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இயன்ற அளவு அரசை வற்புறுத்தவேண்டியது நமது கடமையாகும்.

மாவ்லவி முஹம்மது ஷரஃபுத்தீன் ஃபாஜில் பாகவீ
9790480982                                      
   
                                                                                      

 தகவல் : ஆசிக். 

0 comments:

Post a Comment