Tuesday, July 31, 2012

சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி! விக்கிரவாண்டி விபத்தில் பின்னணி.....?


விக்கிரவாண்டி:வெளிநாட்டில் பணி முடிந்து சந்தோஷமாய் திரும்பியவர்களின் பயணம்,  டிரைவரால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சோகத்தில் முடிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல கோட்டையைச் சேர்ந்தவர் உத்திராபதி, 45. திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த காஜாஷெரீப், திருச்சி கருமண்டபம் அருகே உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர்கள் நான்கு பேரும் சவூதி அரேபியாவிலுள்ள ஜத்தா, துறைமுகத்தில் கஸ்டம்ஸ் அலுவலகத்திலுள்ள, "ரெட் சீ கேட் வே டெர்மினல்' கம்பெனியில் கான்ட் ராக்ட் அடிப்படையில் வேலை செய்தனர். பணி முடிந்து நேற்று முன் தினம் சந்தோஷமாக தாங்கள் சம்பாதித்த பொருட்களோடு தம் குடும்பத்தினரை பார்க்க வீடு திரும்பினர். இவர்களை வரவேற்க ஆறுமுகம் குடும்பத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகன்கள் சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் டிராவல்சில் இருந்து குவாலிஸ் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.


இடைவிடாத பயணம்:காரை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, 22, என்பவர் ஓட்டிச் சென்றார். 27ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்ட கார், 28ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்துள்ளது. மொத்தம் 450 கி.மீ., தூரம் பயணம் செய்த டிரைவர், ஓய்வு எடுக்காமல் விமானநிலையத்தைச் சுற்றி பார்த்துள்ளார். காலை 8 மணிக்கு சென்னை வந்தடைந்த சவூதி விமானத்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் தங்கள் உடைமைகளைச் சரி பார்த்து காலை 10 மணிக்கு வெளியே வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் காரில் ஏற்றி கட்டியுள்ளனர்.


டிரைவர்:அப்போது தஞ்சாவூர் பகுதியிலிருந்து வந்திருந்த டிராவல்ஸ் டிரைவர்கள், குவாலிஸ் காரில் வந்த அனுபவமில்லாத டிரைவரை பார்த்தவுடன், "உன்னை யார் இவ்வளவு தூரம் இந்தச் சாலையில் வரச் சொன்னது' என கேட்டனர். அதற்கு, டிரைவர், "நான் சமாளித்து கொண்டு செல்வேன்' என கூறியுள்ளார். காலை 10.30 மணிக்கு 8 பேருடன் குவாலிஸ் கார், விமான நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி புறப்பட்டது.பகல் 12.30 மணிக்கு கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலைக்கு வரும் போது, டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவும், அதிவேகம் காரணமாகவும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துள்ளனர்.



மரண பயணமானது :
தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து, வெளிநாடு சென்று உழைத்து, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்தோஷமாக வீடு திரும்பி, தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என பெரும் கனவுகளுடன் ஊர் திரும்புவர். இவர்களை அழைத்து வர, அனுபவமில்லாத டிரைவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு சந்தோஷமான பயணம் மரணப் பயணமாக மாறி விடுகிறது. டிராவல்ஸ் நிறுவனங்களும், நீண்ட தூரம் செல்லும் வண்டிகளுக்கு, அனுபவம் மிக்க ஓட்டுனர்களை அனுப்பி வைக்க வேண்டும். விபத்தில் இறந்தவரை நம்பி எத்தனையோ பேர் உள்ளனர். இதனை ஓட்டுனர்கள் நன்கு உணர்ந்து விதிமுறைகளை மீறாமல், அதிவேகத்துடன் செல்லாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

Monday, July 30, 2012

அல்லாஹ்வின் இறை இல்லத்திற்கு உதவிடுவீர்...


அதிரைப்பட்டினத்தில் உள்ள 29 மஸ்ஜித்களில் “மஸ்ஜிதுல் இஜாபா” வும் ஓன்று. C.M.P லேன் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் அமையப்பெற்றுள்ள இப்பள்ளியால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் பயன்பெறும் சிறப்பைப் பெறுகின்றனர். மேலும் நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் நமதூரைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் நமது ஐந்து கடமைகளில் ஒன்றாகிய “தொழுகை”யை இப்பள்ளியில் திறம்பட நிலை நிறுத்தி வருகின்றனர். இப்பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளியை ஒட்டிய வடபுறப் பகுதியில் 1100 சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்வதென்று பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவையடுத்து, இதற்காக ரூபாய் 12 லட்சத்தில் மதிப்பீடு செய்து கட்டுமானப் பணியை தொடங்கி இருகின்றோம்.

இப்பணிக்காக உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களால் இயன்றளவு நிதி உதவி செய்து இக்கட்டுமானப் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிவானாக ! 

பள்ளியின் வங்கி கணக்கு விவரம் :
மஸ்ஜிதுல் இஜாபா
வங்கி கணக்கு எண் : 989629896 (Current Account )
இந்தியன் வங்கிக் கிளை
அதிராம்பட்டினம்

இப்படிக்கு,
நிர்வாகம்-மஸ்ஜிதுல் இஜாபா
C.M.P. லேன்







Sunday, July 29, 2012

துஆ செய்வோம்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை ஆலடித்தெருவை சார்ந்த தி.மு.க பிரமுகர் எஸ். ஜமாலுதீன் அவர்கள் குவைத்தில் திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவர்கள் உடல்நலம் பூரண குணம் அடைய இந்த சங்கைமிகு ரமளானில் அனைவரும் துஆ செய்வோமாக.


இப்படிக்கு

குடும்பத்தினர்

பிலால் நகரை நோக்கி வாருங்கள் நோன்பு கஞ்சி வாங்கலாம்! (காணொளி மற்றும் புகைபடம்)

ஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளில் நோன்பு திறக்கும் சகோதரர்களுக்கு அருந்துவதற்கும் பயன்படுத்தபட்டு வருகின்றதை நாம் அறிந்ததே !

நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது ஹழ்ரத் பிலால் ( ரலி ) நகர் பள்ளியின் கஞ்சி. நமதூரைச் சேர்ந்த பல சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் என பாத்திரங்களுடன் இப்பள்ளிக்கு வந்து வரிசையில் காத்திருந்து கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு 45 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியானது விநியோகம் செய்யும் சில நிமிடங்களில் தீர்ந்து விடுவது குறிப்பிடத்தக்கது.








நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ் சேக்கனா M. நிஜாம்

Saturday, July 28, 2012

FLASH NEWS சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி

சென்னையிளுருந்து  அதிரை சேர்ந்த பயணிகளை விமானநிலையத்தில் இருந்து அழைத்து சென்ற நான்கு சக்கர வாகனம் (குவாலிஸ்) இருசக்கரவாகனத்தில்‌ ம‌ோதுவதை த‌விர்க்கும் பொருட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.அதில் நான்கு பேர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர். இவர்களில் முன்று பேர் அதிரை கரையூர் தெருவை  சேர்ந்தவர்கள். இவர்கள் சவுதியிளுருந்து விடுமுறையை  கழிப்பதற்காக அதிரைக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.வாகன ஓட்டுனர் அஹ்மத்  நியாஸ் அவர்கள் பலத்த காயத்துடன்  விக்கிரவண்டி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இவர் புதுமனை தெருவை சேர்ந்தவர் எனபது குறிப்பிடதக்கது.

தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ் முபின்

ஷிஃபா மருத்துவமனையில் இலவச அலர்ஜி-ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம்


நமதூர் ஷிஃபா மருத்துவமனையில் இலவசமாக அலர்ஜி மற்றும் ஆஸ்துமா கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்






நாள்: 29.07.2012 (ஞாயிற்றுக் கிழமை)


நேரம் : காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை


முன்பதிவுக்கு முந்துங்கள் தொலைபேசி எண்:               04373-242324     


இப்படிக்கு 

ஷிஃபா மருத்துவமனை
பட்டுக்கோட்டை ரோடு அதிராம்பட்டினம் 614701


Thursday, July 26, 2012

50 செயல் வீரர்கள் ம ம க கட்சியில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர்




கடந்த 22.07.2012 அன்று மாலை 5.00 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 50 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு  விலகி  SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு  திருவாரூர் மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தார்.  மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A.முகமது பைசல் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.லத்திப்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  
                இறுதியாக மாலை 6.40 மணியளவில் SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி   நடைபெற்றது. இதில் அத்திக்கடை, பொதக்குடி & பூதமங்கலம் ஆகிய கிளை நிர்வாகிகள் கொரடசேரி ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஆகியோர் 70 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

Tuesday, July 24, 2012

இந்தியா நெக்ஸ்ட் :ஹிந்தி மொழியில் புதிய பத்திரிகை....



புது டெல்லி: "இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை ஜூன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 
விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.
பத்திரிக்கையின் முதல் பிரதிகளை முன்னாள் நீதியரசர் எ எம் அஹ்மதி அவர்கள் என் டி பன்சோலி அவர்களுக்கும பேராசிரியர் சாய் பாபா அவர்களுக்கும் வழங்கினார் .
டெல்லி பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் உட்பட, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த முன்முயற்சியை தங்களது சிறப்புரையில் வெகுவாக பாராட்டினர்

Monday, July 23, 2012

அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டம் வாபஸ்....இந்த நிலைமைக்கு யார் காரணம்? நீயா? நானா?


அதிரையில் கடந்த சில மாதங்களாக மின்சாரம் (voltage) அதிகமாகவும்,குறைவாகவும் இருந்து வருகிறது.இதனால் பல வீடுகளில் தொலைக்காட்சி,மின் விசிறி போன்ற பொருள்கள் பழுதடைந்தது.வீடுகள் மட்டுமின்றி தெரு விளக்குகளும் பழுதடைந்துள்ளது.

புதுமனைத் தெருவில் பல இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இந்த மாதம் புனித மிக்க ரமலான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் இரவு வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.

நேற்றைய தினம் வித்ரு தொழுகை பள்ளியில் தொழுதுவிட்டு வீட்டிற்கு  சென்று கொண்டிருந்த வயதான ஒருவர் சாலையில் கல் தடுக்கி கீழே விழ நேரிட்டது.

இதே போன்று பெண்கள் வீதியில் நடந்து வரவும் அஞ்சுகிறார்கள்.இரவுத் தொழுகை முடிந்து வீட்டிற்கு செல்லும் சிறுவர்களும் மிகவும் அஞ்சுகிறார்கள்.

புதுமனைத் தெரு மட்டுமல்லாமல் பல தெருக்களிலும் இதே போன்று தெரு விளக்குகள் பழுதடைந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்பது இந்த தெரு மக்களின் கோரிக்கையாகும்.

தகவல்:அதிரைகுரல் வஹாப்


கருத்து: அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டத்தை நடத்த வேண்டும்!

Sunday, July 22, 2012

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முஹம்மது ஷரஃபுதீன் பாகவீ

சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரை  மற்றும் மத்திய அரசின் வழி காட்டுதல்படி சென்ற 24 -11 -2009  அன்று தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவு ( 21/2009 ) சட்டததைக் கொண்டு வந்துள்ளது. இது முஸ்லிம்களின் நலன்களைப் பாதிப்பதாகவும் இந்திய அரசமைப்புச் சட்டம் சிருபான்மைனருக்கு வழங்கியுள்ள (Muslim Personnel Law ) முஸ்லிம் தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. அத்துடன் முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்தப் பதிவு தேவையில்லாத ஒன்றுமாகும். ஏனெனில்........

திருமணங்களைப்  பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மிக நம்பகமான முறையிலும் சந்தேகத்துக்கு இடம்மில்லாத வகையிலும் பதிவு செய்யப்பட்டு அவை பாதுகாத்தும் வைக்கப்படுகிறன. சிலநுறு வருடங்களுக்கு முற்பட்ட பதிவேடுகள் கூட இன்றும் உள்ளன. அல்ஹம்துளில்லாஹ்!

தேவைப்படும் நேரங்களில் மஸ்ஜிதுகள் அல்லது காஜிகள் மூலம் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் போதுமானவையாகவும், அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களாவும் ஏற்றுக்கொள்ளாப்படுகின்றன.

பிற பதிவுகளை விட முஸ்லிம் களின் நடைமுறையில் உள்ள பதிவு முறை பாதுகாப்பானதும் நம்பகத்தன்மை  வாய்ந்ததுமாகும். ஏனெனில் மணமகள் அல்லது மணமகள், தான் வசிக்கும் மஹல்லா ஜமாஅத்தின் திருமண அனுமதிச்  சீட்டு ( இஜாமீஸத் நாமா) பெறாவிட்டால் அவர்களுக்கு எங்குமே நிகாஹ் செய்து வைக்கப்படுவது இல்லை , நிகாஹ் தஃப்தரே  கூட தரப்படுவதில்லை என்பதே உண்மைநிலை, இதன் காரணமாக, திருமணம் நடைபெற்று பதிவு செய் யப்பைட்ட பின் கணவன் உயிருடனிருக்கும் நிலையில் அவனுடைய மனைவி வேறு எங்கும் சென்று திருட்டுத்தனமாக நிகாஹ் செய்து கொள்ளமுடியாது. மாறாக ரிஜிஸ்டர் திருமணம் செய்பவர்கள் பல்வேறு இடங்களில் பல திருமனங்கள் செய்து ரிஜிஸ்டரும் செய்கிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் நடைமுறை படுத்தி வரும் பதிவில் எவ்வித முறைகேடும் குறைபாடும் இல்லை அதே சமயம் கட்டாய திருமணப் பதிவுச்சட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை. எங்கோ நடக்கின்ற ஒருசில தகாத நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் கட்டாயமாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒரு சில திருட்டங்களோடு இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது கூட ஏற்கத்தக்கதலல். இந்த கட்டாயப் பதிவுச்சட்டம் இந்திய அரசமைப்புச்சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதும் அந்த உரிமையைப் பறிப்பதுமாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்தச் சட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகள்:     
1. இரண்டு திருமணம் செய்த ஒருவர், இரண்டில் ஒன்றை மட்டும் ரிஜிஸ்டர் செய்து, மற்றதைப் பதிவு செய்யாவிட்டால் இரண்டாவது மனைவி மூலம் பிறக்கும் குழந்தைகள் அவனுடைய வாரிசுகளாக ஆகமுடியாது என்று நிலை ஏற்படும்.

2. ரிஜிஸ்டர் செய்த பின் தலாக் அல்லது குலா ஏற்பட்டாலும்  அவர்களை அரசாங்கம் கணவன் மனைவி என்றே கருதும்.

3. செல்லுபடியாகாத (ஃபாஸிதான) நிகாஹ் ஆக இருந்ததால் அதை ஃபஸ்கு செய்வது - முறிப்பது சிரமமாகிவிடும்.

4. ஷாரீஅத் அனுமதித்துள்ள இரண்டாவது அல்லது முன்றாவது அல்லது நான்காவது திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்போது பல்வேறு நிபந்தனைகளைச் சேர்க்கும் நிலையை இச்சட்டம் ஏற்படுத்தலாம்.

5. சில காரானங்களைக் காட்டி திருமணத்தைப் பதிவு செய்ய, பதிவாளர் மறுத்தால், முஸ்லிம் கணவன் - மனைவி, அரசின் பார்வையில் திருமணம்  ஆகாதவர்களாகவே கருதப்படுவார்கள் அதனால் அவர்களின் குழந்தைகள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

6. இச்சட்டம் ஆலிம்களிடமிருந்தும் ஜமாஅத்துகளிடமிருந்தும் முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பதற்கான பயங்கரச் சதியாலோசனை போல் தோன்றுகிறது. காலப்போக்கில் முஸ்லிம்கள், மஸ்ஜிதில் நிகாஹ் செய்வது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஜமாத்தில் அனுமதி பெறுவது ஆகியவற்றை வீண்வேலை என்று நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

7. ஒவுவொரு ஊர் ஜமாஅத்தும் கப்ருஸ்தானில் இடம் தருவது, நிகாஹ் தஃப்தரில் பதிவு செய்வது, ஆகிய இரண்டு விஷயங்களினால் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, புதிய கட்டாயப் பதிவுசட்டததை அமல்படுத்தினால், ஜமாஆத்தின் கட்டுப்பாட்டிலிருந்து முஸ்லிம்கள் விலகிவிடும் அபாயம் உள்ளது.

8. (சகோதரிகள் போன்ற) மஹ்ரமானவர்களைத் திருமணம் செய்து ஹராமான வாழ்க்கை நடத்த இச்சட்டம் துணைபுரிவும்.

9. அங்க அடையாலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் கூறுவதால்,  கணவன் மனைவி ரிஜிஸ்டர் ஆபீசுக்குச் செல்லாவேண்டிய நிலை ஏற்பட்டு, பர்தா இல்லாத சூழ்நிலையும் குழப்பமும் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.

10. தலாக் ஏற்பட்டுவிட்டால், சீர்சாமான்கள், நகைகள் போன்ற பொருட்களை திருப்பிக் கொடுப்பதற்கு வசதியாக, திருமணச் செலவு எத்தனை, நகைகள் எவ்வளவு சீர்சாமான்களின் விலை எவ்வளவு என்பதையெல்லாம் குறிப்பிட வேண்டும் எனக் கூறி அவற்றின் மொத்தத் தொகைக்கு ஏற்ப ரிஜிஸ்டர் கட்டணம் விதிக்கப்படும் நிலையம் வரலாம்.

11. ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்ய ரூபாய் 100.00  தான் கட்டணம் என்றாலும் ரிஜிஸ்டர் செய்வடர்காகச் செய்ய வேண்டிய செலவுகள், 'கவனிக்கவேண்டிய அன்பளிப்புகள்' ஏராளம், ஏராளம். இது ஏழைகளின் இடுப்பை ஒடிக்கும் சுமையாகும்.

12. இது தவிர, பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள், படிப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் பல சான்றிதழ்களை அரசு கேட்கும் சூழ்நிலை ஏற்படலாம். அது மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

13. 18/21 வயதை விடக் குறைந்த வயதுடைய மாமகள் மணமகனுக்குக் கடுமையான சிக்கல் ஏற்படும்.

மேற்கூறப்பட்ட காரணங்களால், நாம் நிகாஹ் தஃபதரில் பதிவு செய்யும் முறையே சிறந்ததும் பாதுகாப்பானதும், சிரமம் இல்லாததும் சரியானதும் போதுமானதுமாகும், இதைவிட்டு விட்டு வேறொருபதிவு தேவையில்லாததாகும். இதுவும் வேண்டும் அரசுப் பதிவும் வேண்டும் என்பது அறிவார்ந்த கருத்துமல்ல.எனவே திருத்தத்துடனோ திருத்தமில்லாமலோ இந்த கட்டாயப் பதிவுச் சட்டம் இஸ்லாமிர்களுக்கு எவ்வகையிலும் பொருந்தாத ஒன்றாகும். ஒன்று இந்தச் சட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும், அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்காவது இதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இயன்ற அளவு அரசை வற்புறுத்தவேண்டியது நமது கடமையாகும்.

மாவ்லவி முஹம்மது ஷரஃபுத்தீன் ஃபாஜில் பாகவீ
9790480982                                      
   
                                                                                      

 தகவல் : ஆசிக். 

Saturday, July 21, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் நேரடி ஒளிபரப்பு!


இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் அதிரை தக்வா பள்ளியில் நடைபெறும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் தினந்தோறும் இரவு 10:35 மணிக்கு நமது அதிரை தண்டர்(AdiraiThunder) இணையதளத்தில் ஒளிபரப்பாகும். அனைத்து இஸ்லாமிய மக்களும் மார்க்க சொற்பொழிவை கேட்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு இண்டெர்னெட் சேவை வழங்கிய நமதூர் AirTouch நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை தண்டர் ஊடக குழு

Thursday, July 19, 2012

ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்து சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை ஆர்ப்பாட்டம் .



தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்

Wednesday, July 18, 2012

சகோ. ஜாஹிர் உசேன் குடும்பத்தினருடன் சந்திப்பு...


 அதிரை EBயில் பணிபுரிந்து சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோ. ஜாஹிர் உசேனின் சொந்த ஊரான கூத்தாநல்லூரை அடுத்த அரிச்சந்திரபுரத்தில் அவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் ஜமாத்தார்களையும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) நிர்வாகிகள் 18/07/2012 அன்று நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இரு குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும்  ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது SDPI-ன் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் SDPI-ன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z.முகமது இலியாஸ் SDPI-ன் அதிரை நகர செயலாளர் சேக் இல்முதீன் அதிரை நகர துணைத் தலைவர் இப்ராஹிம் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் M.அகமது சலீம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் புலிவலம் அப்துல் லத்திப் அத்திக்கடை கிளை தலைவர் சுல்தான், அத்திக்கடை கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜமாத்தார்களுடன் ஆலோசனை நடத்தும் காட்சி


சகோ. ஜாஹிரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தையுடன் SDPI-யினர்

Monday, July 16, 2012

அதிரையில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன....


அதிரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.இந்த மழை இரவு 12.00 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.மழையுடன்  பலத்த காற்றும் விசியதால் புதுமனை தெருவில் ஒரு வீட்டின் கல்யாண பந்தல் அடியோடு முறிந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து இருக்கிறது பகலில் கடும் வெயில் கொளுத்தியதால் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு,  இரவுயில் பெய்த மழை குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியது.


படங்கள் உதவி: முபின்

Sunday, July 15, 2012

அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டம் வாபஸ்


நாளை(16-07-12) அதிரை மின்சார வாரியத்தை கண்டித்து அதிரை பொது மக்களால் நடக்க இருந்த முற்றுகை போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது .தஞ்சாவூர் மின்சார வாரியத்தின் உயர் அதிகாரி AE அவர்கள் நமது பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை தொடர்பு கொண்டு அதிரையில் ஏற்படும் அணைத்து  மின்சார குறைகளையும் இன்னும் ஒரு வார காலங்களில்  நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.மேலும் பட்டுகோட்டை மின்சார  வாரியத்தின் உயர் அதிகாரி   AD  சிராஜுத்தீன்  அவர்களை நாளை அதிரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். அதிரை மக்கள் எந்த ஒரு போராட்டத்திலும இறங்க வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார்.

தகவல்: Mubeen

Saturday, July 14, 2012

ஒன்றிணைவோம் மின்சாரம் பெறுவோம்!


அதிராம்பட்டினம் மின்சார வாரியம் மற்றும்  மின் பகிர்மான கழகத்தின் மெத்தன போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

தலைமை:அதிரை M.M ரஹ்மத்துல்லா
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்

முன்னிலை: கா. ராஜவேல் B.A 
பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட தலைவர்

அன்புடையீர்
எதிர்வரும் திங்கள்கழமை காலை 9.30  மணியளவில் அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு மின்சாரவாரியம் அதிராம்பட்டினத்தில் கடந்த பல மாதங்களாக பழுதுபட்ட மின்மாற்றியை  (Transparmer) பல முறை  உள்ளூர் அதிகாரி முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை எடுத்து சொல்லியும் பல கோரிக்கைகள் வைத்தும் இதுவரையில் அந்த Transparmer யை மாற்றாமலும் பழுதுபட்ட தெருவிளக்கு  கம்பங்களை மாற்றாமலும்  இருந்து வரும்  அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் பல லட்சகணக்கான பொருட்களை இழக்க நேரிட்டது.பொது நல உணர்வு கொண்ட அணைத்து உணர்வாளர்களும் அதிரையின் நலன் நாடி இந்த மாபெரும்  கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வீர்.

இவன்
பகுஜன் சமாஜ் கட்சி 
அதிரை

Thursday, July 12, 2012

காவல் நிலையத்தில் வியாபாரி சாவு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்



காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி

விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க

வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று

வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்.டி.பி.ஐ

மாவட்டத் தலைவர் பிலால் தலைமை தாங்கினார். வட சென்னை எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அமீர்ஹம்சா, விடுதலை

சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் சென்னை எஸ்.டி.பி.ஐ

மாவட்ட தலைவர் முகம்மது உசேன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்கள்

உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

மீண்டும் போராட்ட அறிவிப்பு

                                                  மீண்டும் போராட்ட அறிவிப்பு



                                                                    மின்வாரியத்தில் அளிக்கப்பட்ட மனு!

அதிரை மின்வாரியம் முற்றுகை!மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம் காணொளி மற்றும் புகைபடம்

அதிரை செக்கடிமேட்டு மின்மாற்றியில் சமிப காலமாக அடிக்கடி  பழுதாவதினால் இப்பகுதிவாழ்  மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக எழுந்த   புகாரை தொடர்ந்து அதிரை பேரூராட்சி தலைவர் தலைமையில் இன்று காலை    10 மனி அளவில் நூற்றுகனக்கானோர் அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

                       அதிரை மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம்







அரஃபாத்தின் மரணத்தில் மர்மம்: பதில் அளிக்க அமெரிக்கா மறுப்பு !


Arafat rumours- 'US to remain mum'
ஹானோய்:ஃபலஸ்தீன் முன்னாள் அதிபர் யாஸர் அரஃபாத்தின் மரணம் தொடர்பாக புதிய விசாரணையின் முடிவிற்காக காத்திருக்கப் போவதில்லை என்றும், ஊகங்களுக்குபதில் அளிக்க முடியாது என்றும் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். வியட்நாமில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர். மேற்காசியாவில் சமாதான முயற்சி உள்பட பல்வேறு
பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் இஸ்ரேல் செல்ல உள்ளதாகவும், ஊகங்கள் எதற்கும் உதவாது என்றும் ஹிலாரி கூறினார்.
அரஃபாத் மரணம் தொடர்பாக வெளியான புதிய புலனாய்வு முடிவை தொடர்ந்து அவரது அடக்கஸ்தலத்தை திறந்து பரிசோதனை நடத்த ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அனுமதி வழங்கியுள்ளார். இதன் பின்னணியில் ஹிலாரியின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை அரசியல் நோக்கர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
9 மாத புலனாய்வுக்கு பிறகு அல்ஜஸீரா 2004-ஆம் ஆண்டு அரஃபாத் மரணத்தில் மர்மம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அரஃபாத்தின் மரணம் ரேடியோ ஆக்டிவ் பொலோனியத்தால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை புலனாய்வு அறிக்கையில் அல்ஜஸீரா கூறியுள்ளது.
thanks to asianaban

தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்': வாஜ்பாய் குறித்து 'டைம்' சொன்னது மறந்து போச்சா? -ப.சி !


டெல்லி: மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர் என்ற டைம் பத்திரிக்கையின் கருத்து தவறானது என்றும், இதைக் காரணம் காட்டி மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கை ரசனையற்றது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.மேலும் 2002ம் ஆண்டு இதே டைம் பத்திரிக்கை அப்போதைய பாஜக பிரதமர் வாஜ்பாயை தூங்கும் பிரதமர் என்று கூறியதையும், அதை
அப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்ததையும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக இந்த மாதத்தின் டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். 'The Underachiever - India needs a reboot' என்ற தலைப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் அதில் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலை செயல்படுத்தியவர் மன்மோகன். ஆனால் தற்போது அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திருப்ப உதவும் சீர்திருத்தங்களை செய்யத் தயங்குவதாக டைம் கூறியுள்ளது. இந்தியப் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பொருத்தமானவர்தானா என்றும் டைம் கேட்டுள்ளது.
மேலும், பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலை, பெருமளவில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, வீ்ழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெருகி வரும் ஊழல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார் மன்மோகன் சிங்.
அவரது அமைச்சர்களையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. பல்வேறு முக்கியச் சட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அனைத்தும் நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மன்மோகன் பதவி விலக பாஜக கோரிக்கை:
இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அவர் கூறுகையில், உலக அரங்கில் இந்தியா ஊழல் மிகுந்த நாடு என்ற மோசமான ரீதியில் பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு அரசியல் அதிகாரம் வழங்கியிருப்பது சோனியா காந்தி என்பதால் அவரும் இந்தப் பழியிலிருந்து தப்ப முடியாது. மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்றார்.
ப.சிதம்பரம் கடுமையான பதிலடி:
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில், இப்போது டைம் பத்திரிகை எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டும் பா.ஜ.கவினர் முன்பு இதே பத்திரிகை வாஜ்பாய் பற்றி எழுதியதையும் பார்க்க வேண்டும்.
2002-ம் ஜூன் மாதம் வெளிவந்த டைம் இதழில் அன்றைய பிரதமர் வாஜ்பாயின் நிர்வாகத்தைப் பற்றி எழுதும்போது "தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்' என்று குறிப்பிட்டது. இதை அப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்தனர்.
அந்தக் கட்டுரையை ரவிசங்கர் பிரசாத் வாசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதாவது படிக்க வேண்டும்.
பிரதமர் பதவி விலக வேண்டும்' என்ற பா.ஜ.க.வின் கோரிக்கை ரசனையற்றது. பத்திரிகைகள் எழுதும் கட்டுரைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்போதுள்ள பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து மீள்வதற்கு பிரதமர் தயாராவாரா என்று கேட்டால், நாம் இந்த நிலையிலிருந்து மீளுவோம் என்பதுதான் பதில். நாம் மீண்டும் உயர்ந்த அளவிலான வளர்ச்சிப் பாதையில் செல்வோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதுதான் டைம் பத்திரிகைக்குத் தரக் கூடிய பதில் என்றார் சிதம்பரம்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் சொந்தமான கருத்துகள் உள்ளன. "டைம்' பத்திரிகை ஒரு புனித நூல் அல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் என்ன நடக்கிறது என்று முதலில் பார்த்த பின்னர்தான் இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டும் என்றார்.
thanks to asiananban