Monday, January 31, 2011

உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!


“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள்(ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)
“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)
“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)
“நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.” (அந்நிஸா: 48)
“மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’(அல்பகரா: 21) 
மேலும் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்தான்.” (அத்தாரிஆத்: 51)
”என்னுடைய சமூகத்தவர்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை.” (அல்அஃராஃப்: 59)
மேலும், “நிச்சயமாக என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்த நபியையும் நாம் அனுப்பவில்லை.” (அல்அன்பியா: 25)
“இன்னும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க மாட்டார்கள்.” (அல்புர்ஃகான்: 68)
(அல்லாஹ்வையாகிய) எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்.” (அந்நூர்: 55)
“நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக!.” (அல்ஜுமர்: 65-66)
”அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது என்றும், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கிறேன். இன்னும் அவன் பக்கமே மீட்சியும் இருக்கிறது.” (அர்ரஃது: 36)
“இன்னும் உமது இரட்சகன் பக்கம் நீர் அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணை வைப்போரில் ஒருவராக ஆகி விட வேண்டாம்,” (அல்கஸஸ்: 87)
“உமது இரட்சகனால் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை. இன்னும் இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும்.” (அன்ஆம்: 106)
இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக என்றும், என் இரட்சகனே! நிச்சயமாக (இந்த சிலைகள்) மனிதர்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன.”(இப்ராஹீம்: 35-36)
“எனவே அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர். (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் ஆகி விடுவீர். இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.” (அஷ்ஷுஅரா: 213-214

Sunday, January 30, 2011

போர்க்கள புயல்… திப்பு சுல்தான் (வரலாற்றுப் பயணம்)


திப்பு சுல்தான்“பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.
திப்பு
“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என தனது இளைய இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் சிலாகித்தார்கள்.
விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி!
இவரது முன்னோர் அஜ்மீர் & குல்பர்கா பகுதிகளிலிருந்து குடியேறிவர்கள். இவர் மைசூர் அரசின் ராணுவ தளபதி. பின்னாளில் மைசூர் அரசுக்கு அரசராக பொறுப்பேற்றார்.
ஹைதர் அலி & ஃபக்ர் நிஸா ஆகியோருக்கு 20&11&1750 அன்று திப்பு சுல்தான் பிறந்தார். அவருக்கு கருவறையே பாசறையாக இருந்தது. பாசறையே கருவறையாக திகழ்ந்தது!
பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தை காட்டினார் தந்தை ஹைதர் அலி. போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.
ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இன்றைய இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஹைதர் அலி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
1782ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண் டாவது மைசூர் போரில் ஹைதர் அலி வீரமரண மடைந்தார். தன் தந்தை வழியேற்று விடுதலைப் போரை தொடர்ந்தார் திப்பு. இவர் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அதிர்ந்த னர். ஆம்! திப்பு ஒரு விடுதலை புலி! அவரது கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப் போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார். தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும்போது நபி (ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.
சீர்திருத்தவாதி
ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.
சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நல்ல மரபை பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என ஆணையிட்ட மனித உரிமைப் போராளி.
கலைஞன் & கல்விச் செம்மல்
உருவமற்ற ஓவியங்களையும், தோட்டங்களையும், நீரூற்றுகளையும் தனது அரண்மையில் உருவாக்கிய திப்பு மிகச் சிறந்த கலை ரசிகர். நல்ல கலைஞர்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜரின் முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.
இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து பார்த்தார். குர்ஆனை தானும் ஓதி, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் ஓத வலியுறுத்தினார்.
தன் பிள்ளையை படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது அறிவிப்பாக இருந்தது.
நூலகமும் & அறிவாற்றலும்
ஏழைகள் இரவும், பகலும் உழைத்துத் தந்து அப்படியே மரணிக்கின்றனர். ஓடும் ஆறுகளின் அழகை ரசிக்கவோ, மேகத்திரள்களை கண்டு மகிழவோ, வானங்களை, சோலைகளை ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்களதுநிலை அப்படியேதான் உள்ளது என்று இலக்கியப் பார்வையுடன் கூடிய இரக்கமுள்ள ஆட்சியாளனாகவும் திகழ்ந்தார்.
இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்பு சுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உர்து, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.
வெளியுறவுக் கொள்கை
திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச் சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவு துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்தமண்ணில் வேரூன்ற விட மாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார். அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.
1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ் பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டி நோபிலுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அச்சமயம் துருக்கியர்கள், மிகப் பெரிய ரஷ்யாவை எதிர்த்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களால் திப்புவுக்கு உதவ முடியவில்லை. மனம் தளராத திப்பு அன்றைய ஐரோப்பாவை மிரட்டிய நெப்போலியனுடன் ராணுவ ஒப்பந்தம் போட ஒரு தூதுக் குழுவை அனுப்பினார். ஆங்கிலேயர்களை ஐரோப்பாவில் மிரட்டிய நெப்போலியனும், இந்தியாவில் அதிர வைத்த திப்புவும் ஓரணி திளர வேண்டிய தருணம் வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி & பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். ஆனாலும் உறவுகளும், ஒப்பந்தங்களும் வந்தபோதும், அது நிறைவேறாமல் போனது வரலாற்று விபத்தாகும்.
திப்புவுக்கு நெப்போலியன் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு…
தேசிய அமைப்பின் தலைமை தளபதி நெப்போலியன் போனபர்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது.
வெல்ல முடியாத படையுடன், தங்களை பிரிட்டனின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க ஆவலுடன் வரவிருக்கிறோம்-. மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள்படி தங்களின் விருப்பத்தையும், அரசியல் சூழ்நிலைகளையும் அறிந்தோம். சூயிஸ் (கால்வாய்) அல்லது கெய்ரோவுக்கு தங்களது கருத்தை அதிகாரப்பூர்வமான & திறமைமிக்க ஒருவர் மூலம் அனுப்பவும். அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
புகழ்பெற்ற இக்கடிதம் 1798ல் கெய்ரோவில் இருந்தபடி நெப்போலியன் எழுதியது.
இக்கடிதம் திப்புவின் கைகளுக்கு கிடைக்கும் முன்னரே திப்பு கொல்லப்பட்டு விட்டார். புகழ்பெற்ற முதல் ஆசிய & ஐரோப்பிய ராணுவ உடன்படிக்கையாக மலர வேண்டிய அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது, இந்திய விடுதலையை இருநூறு ஆண்டுகள் ஒத்தி வைத்தது.        
                               - எம். தமீமுன் அன்சாரி

Friday, January 28, 2011

புனிதப் போராளியின் பயணம்


அஹமது அலி
அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர்,தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போதுஅவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் "பாபா" என்று அறிமுகப்படுத்துவார். அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள் கேட்கும்போதும்பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதபர் இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தவர்

பழனிபாபா
ழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது ஆயக்குடிஇக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர்நீலகிரி மாவட்டம் குன்னூர். தந்தை பெயர் என்.எ.முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி குன்னூரில் காப்பி கொட்டை ராவுத்தர் என்று இவரது தந்தையை அழைப்பார்கள்பழனிபாபா பெற்றொருக்கு நான்கவது குழந்தையாக 14/11/1950ல் பிறந்தார். அஸ்ரப் அலிலியாகத் அலிமுபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான்ரூபினா சுல்தான்ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள்மிகவும் அன்பானநேசமான,பொருளாதார நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.
ஆரம்பக் கல்வி
பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (I.D.O) மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
பட்டப்படிப்பு
பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.
படிப்பில் பிடிப்புஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம்அறிவுக் கூர்மை உடைய பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
பொது வாழ்க்கை
நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில் நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான மேடைகளில் அடைமழையெனபுயலெனஅழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை மாவட்டம்.திட்டச்சேரியில் நடைபெற்றப் பொதுக்கூட்டமாகும்.
தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும்பந்த பாசப்பினைப்பினைபுகளையும் விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது 30ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து கொண்டவர்களுடனும்,நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது "பொது வாழ்க்கைபிரச்சாரம் என்று ஊர் ஊராக திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும் நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?” என்று கூறுவார்.
ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம்அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. யார் இந்த பழனிபாபா?” என்று தமிழக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், தாடி வைத்த,நடுத்தர வயதுடையஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க அலுவலத்துக்குள் நுழைய தடை ” என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார் பாபாதடைஆணைக்கே தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், பழனிபாபா பொது கூட்டங்களில் பேசக்கூடாது எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்துமைக் வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட பேசுறதும்உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான் " என்று காமண்ட் அடித்தார்.
இந்து பாஸிஸம்தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று'என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.
இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு ஆங்கிலத்தில் அரசியல் நிர்ணயச்சட்டம்வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள்.. அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு "தீவிரவாதி"யாகக் காட்டவே தவிர, அவர் ஓரு குற்றவாளி என்பதால் அல்ல.காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் நீதிமன்றத்தில்நிருபிக்கப்பட்ட தே இல்லை!
ஆனால், பழனிபாபாவை "தீவிரவாதி"யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன பத்திரிக்கைகளும்காவல்துறையும் வெற்றி பெற்றது. வாக்குரிமையை முறையாக பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்துநீதிமன்றனகளை,சமுதாய எழுச்சிக்காக முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.
நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துதனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான். பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது. இல்லையெனில்பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.
பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில் இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும்இழப்புக்கு மேல் இழப்பு,இழிவுக்கு மேல் அழிவு என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும், பாபா தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார். இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும் பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.
வழக்குகள்
பழனிபாபா மீது 136 வழக்குகள்125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும்கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா (1991 - 1995)ஆட்சிக்காலத்தில் 1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு முறை ஜெயலலிதா (1991- 1995)ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என விடுதையானார்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன், துனை ஜனாதிபதியாகவும்ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்) திருப்பதி கோவிலுக்கும்காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.
எழுத்துப்பணி
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து?என்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார்.மறுப்புரை நூல் பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டுதடையை நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய விவாதம், பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும்(பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்Who Is Law Abiding On The Issue Of Babri Masjid? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.
பாபா நடத்திய அல்முஜாஹித்”, முக்குல முரசு”, “புனிதப்போராளி”,ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள்நூல்கள்மேடைபேச்சு,அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுஇஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.
வெளிநாட்டு பயணம்
இலங்கைமலேசியாசிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.
1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக் கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின் சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர்..
இறுதிக் காலம்
கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.
ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து,வெளிநாட்டில் வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும்பொருளாதார உதவிகளையும் பெற்று ஜிஹாத் கமிட்டி மூலம் பல ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள் செய்து வந்தார்.
தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து,அவர்களுக்கு மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார். இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர்தாழ்த்தப்பட்டோர்வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.இதனால் முஸ்லிம்களைப்போல் பிற சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.இந்த மூன்று சமூகங்களும் அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல்,ஆளப்படும் ஜாதி என்பதை கண்டுணர்ந்துஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை புறாக்களோடும்இயற்கையோடும் கழித்தார்.
மறைவு
1997 ஜனவரி 28ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன்,பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஒருவன்ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும்முகத்திலுமாக 13 வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். மறுநாள் 29-ம் தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (IDO) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும்அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதிஎன்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியைமுன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ் பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர் எனலாம்.

Thursday, January 27, 2011

டி.என்.டி.ஜேயின் அவதூறுகளும் கடைந்தெடுத்த முட்டாள்தனமும்!

டி.என்.டி.ஜேயின் அவதூறுகளும் கடைந்தெடுத்த முட்டாள்தனமும்! கடந்த 64 ஆண்டுகளாக அதிகாரவர்க்கத்தின் புறக்கணிப்பால், சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு இவற்றில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கும் இதே போன்று ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கும் தீர்வாக வெற்றிடமாக உள்ள ஒன்றை நிரப்பும் வகையில் உருவாக்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ என்கிற தேசிய அரசியல் கட்சி. இது மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்ட ஒரு பொதுவான அரசியல் கட்சியாகும். இதற்கென்று கொள்கைகளும் சட்டதிட்டங்களும் தனியாக உருவாக்கப்படுள்ளது. இது, எந்த சமூக அமைப்பின் துணை அமைப்போ அல்லது கிளை அமைப்போ அல்ல! கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. பல்வேறு அமைப்புகளிலும் அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்து செயல்பட்டவர்கள், பல்வேறு மதங்களையும் சார்ந்தவர்கள். இப்படி ஒரு அரசியல் பேரியக்கம் தேவை என்பதை உணர்ந்து, அதை உருவாக்க முயற்சி எடுத்தது, உதவி செய்தது என்பதை தவிர எஸ்.டி.பி.ஐயின் நிர்வாகத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. எந்த மதத்தையும், இயக்கத்தையும், கொள்கைகளையும் சார்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐயில் உறுப்பினராக இணைய முடியும்; நிர்வாகிகளாகவும் வரமுடியும். எஸ்.டி.பி.ஐன் கொள்கைகளும் நோக்கங்களும் லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் மூலமும், நூற்றுக்கணக்கணக்கான பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமும் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்சியின் “மெனி ஃபெஸ்டோ” என்ற செயல்திட்ட அறிக்கையும் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவை எவற்றிலும் எஸ்.டி.பி.ஐ. இஸ்லாத்தின் கொள்கைகளையும். கடமைகளையும் சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்றோ, இதை மீறுபவர்கள் கட்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றோ நாம் குறிப்பிடவில்லை. எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கபட்ட சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்காக உருவாக்கபட்டுள்ள பொதுவான அரசியல் கட்சி. இதில் இஸ்லாமிய ஒழுக்கங்களை பேணி நடப்பவர்களும், இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் மார்க்கத்தை அறியாத முஸ்லிம்களும், தலித்கள், கிறிஸ்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்ணக்கானோர் உறுப்பினர்களாகவும் செயல்வீரர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கிளைகளும் அமைக்கப்படுள்ளன. இது போன்றே மாவட்டம், தொகுதி மற்றும் நகர, கிளை கமிட்டி நிர்வாகிகளாக பல்வேறு சமூகங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பொறுப்பேற்று செயல்படுகிறார்கள். சமூக சீர்கேடுகள், ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது மட்டும் தான் கட்சியில் கேடர்களாக செயல்வீரர்களாக சேர்வதற்கு நாம் வைத்திருக்கும் நிபந்தனை. சாதாரண உறுப்பினராக யார் வேண்டுமானாலும் சேரமுடியும். இது தான் எஸ்.டி.பி.ஐயின் அமைப்பு முறை. இப்படி பல்வேறு மதத்தவர்கள் சேர்ந்து செயல்பட கூடிய ஒரு கட்சி எப்படி ஒரு மதத்தின் ஒழுக்கநெறிகளையும் கடமைகளையும் அடிப்படையாக வைத்திருக்கமுடியும், மற்றவர்கள் மீது திணிக்க முடியும். எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள யாருக்கும் தங்களுடைய மதத்தை, கலச்சாரத்தை, கொள்கைகளை பின்பற்ற தடை இல்லை. முஸ்லிம்களையும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களை அரசியல் அதிகாரம் ஒரு சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியக்கனவோடு எஸ்.டி.பி.ஐ. புறப்பட்ட உடனேயே இதன் வளர்ச்சியை தடுக்க உளவுத்துறையும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளும் கேரளாவில் எஸ்.டி.பி.ஐன் வளர்ச்சி தங்கள் கட்சிக்கு ஆபத்து என உணர்ந்த மார்க்சிஸ்ட்டுகளும், இதுபோன்ற இன்னும் பல்வேறு அமைப்புகளின் தடைகளை உடைத்துத் தான் எஸ்.டி.பி.ஐ தேசிய அளவில் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐயின் வளர்ச்சி தங்களுக்கு பெரும் ஆபத்து என்று உணர்ந்த டி.என்.டி.ஜே என்ற அமைப்பினர் (இவர்களின் தகிடுதத்ததங்களையும், ஊழல்களையும், ஒழுக்க கேடுகளையும், முரண்பாடுகளையும், அவதூறு பிரச்சாரங்களையும், கோஷ்டி மோதல்களையும் வெளிப்படுத்த அதற்கென்றே பல வார, மாத இதழ்களும், இணையதளங்களும் உள்ளன. அது நமக்கு அவசியமில்லை. நம் மீது சுமத்தியுள்ள உணர்வற்ற உணர்வு இதழின் அவதூறுகளுக்காக மட்டுமே இதை எழுதுகிறோம்). கடந்த (2011 ஜனவரி 713, 1421) இரண்டு உணர்வு இதழ்களில் எஸ்.டி.பி.ஐயின் மீது அவதூறு செய்திகளையும் முட்டாள்தனமான குற்றச் சாட்டுகளையும் எழுதியதோடு தமிழகம் முழுவதும் வளைகுடா நாடுகளிலும் தொடர் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணர்வின் உளரல்களை பி.ஜே மத்ஹபை சார்ந்தவர்களை தவிர வேறு யாரும் பொருட்டாக மதிப்பதில்லை (டி.என்.டி.ஜேவில் உள்ள பெரும்பாலானோர்களே நம்புவதில்லையாம்) என்றிருந்தாலும் உண்மையை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். பொங்கல் வாழ்த்து பேனரும் டி.என்.டி.ஜேயின் அரைவேக்காட்டுத்தனமும்! நாம் மேற்குறிப்பிட்டதை போன்று எஸ்.டி.பி.ஐ அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில், இதன் உறுப்பினர்கள் தங்கள் மதப்பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர்கள் வைப்பதை எஸ்.டி.பி.ஐ மாத்திரமல்ல, இது போன்ற எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது. இவ்வாறு வைக்கப்பட்ட சில பேனர்களின் புகைப்படங்களை தங்கள் உணர்வில் வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துள்ளனர் பி.ஜெ மத்ஹபை சார்ந்தவர்கள். மேற்படி பேனர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்த பேனரில் தங்களது சக அல்லது மேல்மட்ட நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு வைத்துள்ளனர். உண்மையை மறைத்து அவதூறு பரப்பும் கும்பல் அந்த பேனரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர் உள்ளதையோ அல்லது அவர்கள் புகைப்படங்கள் உள்ளதையோ குறிப்பிடவில்லை. ஒரு கட்சியை விமர்சிக்கும் போது அதன் கொள்கை என்ன? அவர்கள் தங்களை இஸ்லாமிய அரசியல் கட்சி என்று வாதிடுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளாமலேயே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த அறிவு சூனியங்களை, மார்க்க அறிஞர்களாக நினைப்பவர்களை பற்றிதான் கவலைப்பட வேண்டும். திருப்பூரில் நடந்ததென்ன? திருப்பூரில் ஜூம்ஆ உரையில் எஸ்.டி.பி.ஐ இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என அங்கு உரையாற்றியவர் பேசியுள்ளார். அதோடு பல்வேறு அவதூறுகளையும் வழமைபோல அவிழ்த்து விட்டுள்ளõர். அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அமானுல்லா தனது மறுப்பை தெரிவித்திருக்கிறார். அவர் எழுந்து தனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரவேண்டும் என கேட்க, ஜூம்ஆ முடிந்ததும் உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் ஜும்ஆ முடிந்த பின்பும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் கடுமையான வற்புறுத்தலுக்கு பின்பு தான் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் தங்களது சாதனையாக கருதும் டி.என்.டி.ஜே கும்பல் முழக்கமிட்ட அவரது விளக்கமும் கருத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் பார்த்தால் தெரியும். ‘’நாங்கள் தனிப்பட்ட முறையில் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள். ஆனால் எஸ்.டி.பி.ஐ குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பல்ல. இது ஓர் பொதுவான அரசியல் கட்சி.’’(ஏனெனில் இது அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் பொதுவான அரசியல் கட்சி). இது தான் அவர் அளித்த விளக்கம். இந்த விளக்கத்தை ஆய்வு செய்யாமல், அதற்குப் பின் தொடர்ந்தும் வாய்ப்பளிக்காததோடு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்ட இந்த கொள்(ளை)கை தங்கங்கள், அமானுல்லாஹ்வும் அவருடன் வந்தவர்களும் பள்ளிவாசலில் புகுந்து தகராறு செய்ததாகவும்,அடிக்க முனைந்ததாவும் அமானுல்லா உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது? விபச்சாரிக்கு வக்காலத்து காவல்துறைக்கு பல்லக்கு! டி.என்.டி.ஜே.யின் சுயரூபம் பாரீர்! கடந்த ஜனவரி 21 உணர்(ச்சி)வு இதழில் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ஒரு வக்கிர புத்தியையும், ஆபாச எண்ணங்களையும் (அனுபவம் அப்படித்தான் யோசிக்க தோன்றும்) தெளிவுபடுத்தியது. உண்மையில் நடந்த நிகழ்வு யாதெனில்: மதுரை மஹ்பூப் மற்றும் பாளையம் பகுதியில் புல்லட் ராணி என்ற பெண் குணசுந்தரி என்ற பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தார். இதனை அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பரகத், அல்ஹாஜ்,பாதுஷா மற்றும் பாஷா ஆகியோர் (அவர்கள் டி.என்.டி.ஜே அøப்பில் இல்லாத காரணத்தால்) இதை கண்டித்து வந்துள்ளனர். கடந்த 12.1.2011 அன்று மேற்படி பெண்கள் பொது இடத்தில் நின்று பிறரை கவர்ந்தவர்களாக நின்று கொண்று அநாகரீகமாக நடந்துள்ளதோடு, பர்தா அணிந்து முஸ்லிம் இளைஞர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் மேற்படி இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சிக்கும் போது புல்லட் ராணி தப்பி விட்டார். குணசுந்தரியை மட்டும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சி 3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு விபச்சாரி மீது அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்த காவல்துறை (மõமூலோடு தானே விபச்சார விடுதிகள் நடைபெறுகிறது), புல்லட் ராணியிடமிருந்து ஒரு புகாரை பெற்று பெண்ணை கடத்தியதாக நான்கு பேரின் மீதும் புகாரை பதிவு செய்து கைது செய்தது காவல்துறை. நடந்த சம்பவத்தை திரித்து, காவல் துறையின் அராஜகத்திற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி, விபச்சாரிக்கு இளம்பெண் என அடைமொழி கொடுத்து, ஆட்டோவில் வரும்போது என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று தனது ஆபாச கற்பனையை அலையவிட்டு தன்னுடைய தவ்ஹீதை வெளிச்சமாக்கியிருக்கிறது மான உணர்வற்ற உணர்வு வார இதழ். ( அவதூறை வாரி இறைக்கும் இதழ்) இதில் பாஷா என்பவர் எந்த கட்சியும் சேராதவர் பரக்கத், அல் ஹாஜ், பாபு என்ற பாதுஷா ஆகிய மூவரும் த.மு.மு.க.வில் இருந்து விலகி எஸ்.டி.பி.ஐ.யில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர்கள். பரக்கத் கிளை துணை செயலாளராகவும் அல் ஹாஜ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தனர். சம்பவம் நடைபெற்ற இரு மாதங்களுக்கு முன்பு கட்சியின் ஒழுங்குகளை மீறியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மூவரும் நீக்கப்பட்டு பரக்கத்துக்கு பதில் பிலால் என்பவர் துணைச் செயலாளராகவும் அல் ஹாஜ்க்கு பதில் ரபிக் ராஜா என்பவர் பொருளாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றõர்கள். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ ன் எந்தவொரு நிர்வாகிகளும் காவல்நிலையம் செல்லவில்லை. எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக (உணர்வைத்தவிர) எந்த பத்திரிக்கைகளிலோ அல்லது காவல்துறையோ யாரும் குறிப்பிடப்படவில்லை. இந்த உண்மைகள் தெரிந்தும் எஸ்.டி.பி.ஐ. மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடும், காவல்துறைக்கு கைமாறு செய்யும் நோக்கத்தோடும் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் வகையிலும் செயல்பட்டு, பக்கம் பக்கமாக அவதூறு பரப்பிய உணர்வின் செயலும் டி.என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளும் கேவலமானது என்றால் மிகையல்ல! உணர்வின் இந்த ஆபாசக் கட்டுரை வந்த உடனேயே அப்பகுதி மக்கள் டி.என்.டி.ஜே வக்கிர புத்தியைகண்டித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் ஊதுகுழலா? அல்லது உளவுத்துறையின் கைப்பாவையா? திருவிடைச்சேரியில் கடந்த ரமளானில் ஜமாஅத் தலைவரை பள்ளிவாசலில் புகுந்து படுகொலை செய்த பயங்கரம் நடந்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக திருவிடைச்சேரி சென்று விசாரித்து அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகளான டி.என்.டி.ஜேவினரை கைது செய்! என அனைத்து அமைப்புகளின் பெயருடன் தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐக்கு அழைப்பும் இல்லை. நாம் கலந்து கொள்ளவும் இல்லை. எஸ்.டி.பி.ஐ பெயர் சுவரொட்டியில் இடம் பெறவுமில்லை. ஆனால் அந்த சுவரொட்டிக்கு பதிலாக டி.என்.டி.ஜே. ஒட்டிய சுவரொட்டியில், “தீவிரவாத அமைப்புகளான பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ.யை தடை செய்! முன்னாள் சிமி தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களான பாக்கர், ஜாவாஹிருல்லாஹ்வை கைது செய்!” என்றும் குறிப்பிட்டு சங்பரிவாரின் கைக்கூலிகள் தாங்கள் என்பதை நிருபித்தனர். நெல்லை ஏர்வாடியில் டி.என்.டி.ஜேயின் வம்பும் இமாலய புரட்டும்! மேற்படி சுவரொட்டியை ஏர்வாடியில் அன்றைய தின ஒட்டபட்ட எஸ்.டி.பி.ஐயின் சுவரொட்டி மீது நள்ளிரவில் ஒட்டினர். எஸ்.டி.பி.ஐயின் செயல் வீரர்கள் வேறு இடத்தில் ஒட்டுமாறு சொன்ன போது அங்கு தான் ஒட்டுவேன் எனச் சொல்லி கைகலப்பில் ஈடுபட்டு மறுநாள் காலையில் டி.என்.டி.ஜே. பள்ளிவாசலில் பணி புரியும் அம்ஜத் என்பவரை மருத்தவமனையில் அனுமதித்து விட்டு பள்ளிவாசலில் புகுந்து எஸ்.டி.பி.ஐயின் நிர்வாகிகள் இமாமை தாக்கியதாக புகார் கொடுத்தனர் இந்த சினிமா நடிகர்களை மிஞ்சும் மார்க்க நடிகர்கள். அத்தோடு விட்டார்களா? தங்களது மீடியாக்கள் மூலம் இமாம் தாக்கப்பட்டதாக நீலிகண்ணீர் வடித்தனர். தென்காசியில் டி.என்.டி.ஜே.யின் அத்துமீறலும் ஆகாச புளுகும்! தென்காசி நகரில் டி.என்.டி.ஜே. எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்ததாக தங்களது இணையதளத்தில் நாடகமாடியுள்ளனர். ஆனால் நடந்த உண்மை நிகழ்வு இதோ: கடந்த ஜனவரி 9ல் தென்காசியில் நடைபெற்ற டி.என்.டி.ஜேயின் கருத்தரங்கத்திற்காக மஹ்மூது மிஸ்பாஹி ஆலிம் அவர்களின் வீட்டு சுவரில் அவரின் அனுமதி பெறாமலேயே விளம்பரம் செய்திருந்தனர். அதை அழித்துவிட்டு எஸ்.டி.பி.ஐயின் சென்னை மண்டல மாநாட்டு விளம்பரம் எழுத உரிமையாளர் அனுமதி தந்திருந்தும் மேற்படி நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து விட்டு டி.என்.டி.ஜே. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அச்சுவரில் வெள்ளை சுண்ணாம்பு அடித்து கு.ஈ.க.ஐ ஊதடூடூ என குறிப்பிட்டு அனுமதி பெற்ற சுவர் என்பதையும் எழுதி விட்டு வந்துள்ளனர் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிள். ஆனால் மறுநாள் அந்த இடத்தில் வீட்டு உரிமையாளரிடமோ அல்லது அனுமதி பெற்ற எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளிடமோ தெரிவிக்காமல் தங்களது ஜனவரி 27 நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை அச்சுவரில் எழுதி சென்றுள்ளனர். வம்பு செய்யும் நோக்கோடு செயல்பட்டதால் மறுநாள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அதை அழித்து விட்டு தங்களது விளம்பரத்தை எழுதினர் டி.என்.டி.ஜேன் வன்முறை கும்பலோ பல இடங்களில் எழுதியிருந்த எஸ்.டி.பி.ஐன் விளம்பரங்களை அழித்து தங்கள் ஆணவ புத்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் காவல் நிலைத்தில் புகார் அளித்ததில் 9 டி.என்.டி.ஜேவினர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவற்றை யெல்லாம் மறைத்து பாபரி விளம்பரத்தை அழித்து விட்டார்கள் என புளுகுவதற்கு என்ன பெயர்? இதற்கு பெயர் தான் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதோ? இறுதியாக டி.என்.டி.ஜே. அமைப்பினருக்கு நாம் சொல்லிக் கொள்வது எஸ்.டி.பி.ஐ எல்லா மதத்தினரும் இணைந்து பனியாற்றும் பொதுவான அரசியல் கட்சி. மதரீதியான பிரச்சாரங்களிலோ அல்லது விமர்சனங்களிலோ எஸ்.டி.பி.ஐ ஈடுபடாது. இது போன்ற தேவையற்ற வாதங்களிலோ விமர்சனங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம். அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலாகவே இதை எழுதுகிறோம். எங்கள் நோக்கத்தையும் பயணத்தையும் திசைதிருப்பாதீர்கள். எஸ்.டி.பி.ஐ தடைகள் உடைத்து பாய்ந்து வரும் பெரும் வெள்ளம். இதை தடுக்க நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். இது போன்ற அவதூறு செய்திகளுக்கு விளக்கம் தருவது மாத்திரமல்ல, சட்டரீதியான நடவடிக்கைகளையும் எஸ்.டி.பி.ஐ மேற் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரும்ப

ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்ற துடித்த பாஜக ஒரிசாவில் தலைகீழாக ஏற்றியது.

புவனேஸ்வர்: ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று துடித்த, போராட்டத்தில் குதித்த, பரபரப்பை ஏற்படுத்திய பாஜக, ஒரிசாவில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி தலை கவிழ்ந்துள்ளது.

ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று பாஜகர சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடியை ஏற்றினர். ஆனால் கொடி தலைகீழாக இருந்தது. இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், கட்சியினரும், முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹரிச்சந்திரனிடம் இதைத் தெரிவித்தனர். இதையடுத்து கொடியை அவசரமாக இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினர்.

இதுகுறித்து ஹரிச்சந்திரன் கூறுகையில், இந்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வேண்டும் என்றே இது நடக்கவில்லை. தவறுதலாக நடந்து விட்டது என்றார்.

இதேபோல ஆளும் பிஜு ஜனதாதள அலுவலகத்திலும், தேசியக் கொடி சரியாக ஏற்றப்படாமல், கொடி கீழே விழுந்தது. முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது கொடி சரியாக விரியாமல்அப்படியே மேலிருந்து கீழே விழுந்தது. உடனடியாக வேறு கயிறைக் கொண்டு வந்து அதில் கொடியைக் கட்டி மீண்டும் ஏற்றினார் நவீன் பட்நாயக்

எகிப்து அதிபருக்கு எதிரான வன்முறை போராட்டங்கள்: 4 பேர் பலி

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதித்திருந்தும் அதை பொருட்படுத்தாது ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

ஹோஸ்னி முபாரக் (82) கடந்த 30 ஆண்டு காலமாக எகிப்து அதிபராக சர்வாதிகார ஆட்சி புரிந்து வருகிறார். பொறுமையை இழந்த மக்கள் அவரது கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். உடனே கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு போலீசார் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 150 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் தஹ்ரிர் ஸ்கொயரில் தான் போராட்டத்தை நடத்தினர். அங்கு போலீசார் 50 கண்ணீர் புகை குண்டு வீசியதில் அந்த இடமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்து முழுவதும் போராட்டம் நடந்தது.

தடையை மீறி போராட்டக்காரர்கள் நேற்று கெய்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடினர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி " உணவு, சுதந்திரம் மற்றும் சமத்துவம்" வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

வடக்கு சினாயில் கிராமத்தினர் வாதி அல் நட்ரூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான வாலிபர்களை விடுவிக்குமாறு நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தினர்.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் முதலில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. பின்ர் கையால் எழுதப்பட்ட சிறு துண்டுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தஹ்ரிர் ஸ்கொயரில் கூடிய மக்களிடையே கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அல் ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அங்கு கூடியவர்கள் அதிபர் முபாரக் மற்றும் பிரதமர் அஹமது நசீப் பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசை உருவாக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்

Wednesday, January 26, 2011

அஸிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்: நிரபராதிகளை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் - எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்



:இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து அஸிமானந்தா நீதிமன்றத்தில் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னர் இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

அஸிமானந்தா அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு காரணம் என்ன என்பதுக் குறித்து எஸ்.டி.பி.ஐ முன்னரே கூறியதை அட்சரம் பிசகாமல் உறுதிச் செய்வதாக எஸ்.டி.பி.ஐயின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேகான், அஜ்மீர், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையில் முஸ்லிம்களோடு, குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களோடு புலனாய்வு அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ தெரிவித்திருந்தது.

நாட்டில் ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழும்தோறும் முஸ்லிம் பெயர்களை தாங்கிய அமைப்புகளின் பெயரைக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடி கைதுச் செய்வது புலனாய்வு ஏஜன்சிகளின் வழக்கமான பணியாகும். மூன்றாவது முறையிலான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் வாங்குவது அடுத்த கட்டமாகும். இவ்வகையில் பொய் வழக்குகள் சுமத்தப்பட்டவர்களீன் வாழ்க்கையை சீரழிக்கும் சூழல்தான் வழக்கமாக ஏற்பட்டது.

1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளைக் குறித்தும் பரிபூரணமான விசாரணை தேவை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என எஸ்.டி.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களுக்கு இக்குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளது என அஸிமானந்தாவின் வாக்குமூலம் தெரிவிக்கிறது. இச்சூழலில் இந்திரேஷ்குமார் உள்பட ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைதுச் செய்ய அதிகாரிகள் தயாராக வேண்டும்.

ஹிந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பகைமையையும், துவேஷத்தையும் வளர்த்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலமே தேசத்தை அமைதியை நோக்கி வழிநடத்த முடியும். இதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகள் முயலவேண்டும்.

ஹிந்துத்துவா தீவிரவாதத்துடனான மிருதுவான அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகவேண்டும் என எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

-நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, January 25, 2011

இந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா - ஜஸ்வந்த் சிங்


ந்திய மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் முகம்மது அலி ஜின்னா என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி வீரர், பாகிஸ்தானை நிர்மாணித்தவர், அந்நாட்டின் தந்தை என்று பல பெருமைகளை பெற்றவர் மறைந்த ஜின்னா.

ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள ஜின்னா-சுதந்திர இந்தியா பிரிவினை என்ற நூல், தில்லியில் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலின் போது கூறியதாவது:

மகாத்மா காந்தியால் உயர்ந்த மனிதர் என்று பாராட்டப்பட்டவர் ஜின்னா. அவர் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். சுதந்திர இந்தியாவை பிரிவினைப்படுத்தியவர் ஜின்னா என்ற தவறான கருத்துகள் இன்னமும் இருக்கின்றன.. அதைப் போலவே இந்துக்களுக்கு அவர் எதிரானவர் என்ற தவறான எண்ணமும் உள்ளது. அவர் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். மிகச் சிறந்த இந்தியர். சுதந்திரத்தின்போது மைய அதிகார முறையை கொண்டு வர நேரு முயற்சித்தார். ஆனால், கூட்டாட்சி முறை வேண்டும் என ஜின்னா விரும்பினார். இதை காந்தியும் விரும்பினார். ஆனால், நேரு இவற்றை ஏற்கவில்லை.

இதனால் பிரிவினை கோரினார் ஜின்னா. பிரிவினையை அவர் கோரினாலும் மகாத்மா காந்தி, ராஜாஜி, மெளலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் நிறைவாக முடிவு செய்யப்பட்டே பிரிவினை அளிக்கப்பட்டது.

பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அன்னியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த மன வலியுடன் இதை தாங்கி கொண்டனர். இருப்பினும், இந்தியாவின் ஒற்றுமைக்காக அவர்கள் குறிப்பிடும்படியாக செயல்பட்டனர் என்றார்.

"ஜின்னா பற்றிய கருத்துகள் என்னுடைய சொந்த கருத்துகள் தான். கட்சியின் கருத்து அல்ல. ஜின்னாவை பற்றிய நூலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நான் எழுதவில்லை.. இந்தியனாக இருந்தே எழுதியுள்ளேன். இது எனது கட்சியின் ஆவணமல்ல.

நான் இவ்வாறு புத்தகம் வெளியிடுவது கட்சிக்கு தெரியும்' என்றார் ஜஸ்வந்த் சிங்.

ஜின்னா விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


எழுத்துதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஜஸ்வந்த்சிங் மீது பா.ஜ.க. எடுத்திருக்கும் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. இந்திய வரலாறு இது வரையில் சரியான முறையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை, 1935 முதல் 1948 வரையில் உள்ள காலகட்டத்தை இவர்கள் பார்த்தவிதம், எடுத்து வைத்த அரசியல் வாதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த மூன்று முக்கிய தலைவர்கள் :தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஆகியோர்.

அரசியல் என்பது சாமானிய மக்களுக்கு அதிகாரம் தருவதாக இருக்க வேண்டும். மேலாதிக்கம் என்பதை எதிர்க்க உதவும் ஒரு கருவிதான் அரசியல். மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் இவர்கள். ஆனால் இன்று இந்த மூன்று முக்கிய தலைவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் சுருங்கிய பார்வையில் அடைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வெறும் தமிழகத் தலைவராக மட்டும் அகில இந்திய அளவில் பார்க்கப் படுகிறார். அம்பேத்கரை வெறும் ஒரு தலித் தலைவராக சுருக்கும் முயற்சியில் மேலாதிக்கவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜின்னாவின் நிலை இன்னும் மோசம். இவரை ஒரு பிரிவினைவாதி, பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை துண்டாக்கியவர், ஒரு முஸ்லிம் மதவாதி என்று இந்திய இந்து வலதுசாரிகள் சித்தரிக்க, அந்த பிம்பம்தான் பொதுவான தளத்தில் மக்களின் கற்பனையை கவர்ந்துள்ளது.

இந்த நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால், பரந்த அரசியல் புரிதலுக்கு இதுபோன்ற வறட்டு வாதங்கள் உதவாது. ஜின்னாவைப் பற்றி நம்முடைய பார்வையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த உதவியிருக்கும் ஜஸ்வந்த்சிங்குக்கும், அவரை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. தலைமைக்கும் நாம் ஒருவிதத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னாவின் அரசியலைப் புரிந்துகொள்ளுவதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். 25-12-1876 அன்று கராச்சி நகரில் மித்திபாய் மற்றும் ஜின்னாபாய் பூஞ்சா என்கிற செல்வந்தருக்கும் முதல் மகனாய் ஜின்னா பிறந்தார். அவரது தாய்மொழி குஜராத்தி. கராச்சியிலும் மும்பையிலும் பள்ளிக் கல்வி கற்ற ஜின்னா, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 19-வது வயதில் மிக குறைந்த வயதுடைய வழக்கறிஞராக இங்கிலாந்து நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக இங்கிலாந்தில் அப்போது பிரபலமாக இருந்த வில்லியம் களாட்ஸ்டோனின் "லிப்ரல் பார்வையால்' கவரப்பட்டு, முற்போக்கு கொள்கைகளும் ஜனநாயக மரபுகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்தார். 1900-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தாதாபாய் நௌரோஜியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜின்னாதான்.

நவீனத்துவம் என்பது மதவாதிகளின் கைகளில் சிக்கி, வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடக்கூடாது என் பதில் மிகவும் அக்கறை கொண்ட ஜின்னா நவீனத் துவத்தின் ஒரு அடையாளமாக எப்பொழுதும் கோட் மற்றும் சூட்தான் அணிந்து காட்சியளித்தார். முஸ்லிம் மதவாதிகள் சிலர் அந்த காலத்து உடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் உடை விஷயத்தில் கடைபிடித்த பிற்போக்கான நிலையை தன்னுடைய எழுத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகளின் ஆடை அணியும் முறையிலும் கட்டுபெட்டித் தனத்தை எதிர்த்து செயல்பட்டவர்தான் ஜின்னா.

1902-ல் குடும்ப வியாபாரத்தை கவனிக்க இந்தியா திரும்பிய ஜின்னா, மும்பையில் ஒரே ஒரு ஆண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1903 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட ஆரம்பித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பிரபல வக்கீல்களில் அவரும் ஒருவர் என்கிற புகழைப் பெற்றார்.

1905-ல் பாலகங்காதர திலகர் மீது தேசகுற்றம் சுமத்தி ஆங்கில அரசு கைது செய்தபோது, திலகரின் சார்பாக வாதிட்டவர் ஜின்னாதான். அவருடைய வாதங்கள்: "சுதந்திரம் கேட்பது பிறப்புரிமை, தேச குற்றமல்ல. சுயஆட்சி என்பதுதான் முறையே அன்றி அந்நிய ஆட்சி அல்ல'' -இந்த வாதங்களே பின்னாளில் இந்திய சுதந்திர வேட்கையை வழிநடத்திச் செல்ல உதவிய வாதங்கள்.

கோபாலகிருஷ்ண கோகலே, பிரோஷா மேத்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட IMPERIAL LEGISLATIVE COUNCIL உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா, குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். முஸ்லிம் மக்களுக்கு வஃக்ப் வாரியத்தை உரு வாக்கினார். பின்னர் SANDHURST COMMITEE-யில் உறுப்பினராகச் சேர்ந்து இந்தியாவின் முதல் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான INDIAN MILITARY ACADEMYஐ டேராடூன் நகரில் உருவாக்கியதும் ஜின்னாதான்.

1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானபோது அதில் சேர முடியாது என்று அறிவித்த ஜின்னா, அரவணைத்துச் செல்லும் அரசியலுக்கு மத அடிப்படையில் கட்சி அமைத்தது எதிரான செயல் என்று நம்பினார். ஆனால் 1905-ல் வங்க மாகாணத்தை பிரித்தவுடன் ஏற்பட்ட இந்து மேல்ஜாதிஅமைப்பினரின் வகுப்புவாதம் அவரை மிகவும் வாட்டியது. விளைவு... 1913-ல் முஸ்லிம் லீக்கில் ஜின்னாவே சேர்ந்தார். 1916-ல் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் லீக்கும் அந்த ஆண்டே ஒரு ஒப்பந்தத்தை போட்டு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை எடுக்க உதவி செய்தார். 1918-ல் ரத்தன்பாய் பெட்டிட் என்கிற பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, முஸ்லிம் தலைவர்களும், பார்சி தலைவர்களும் ஒன்றாக இந்த கலப்புத் திருமணத்தை எதிர்த்தனர். 1919-ல் இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஒரே ஒரு குழந்தை டினா ஜின்னா. இந்த டினா ஜின்னாவின் மூத்த மகன்தான் பாம்பே டையிங் கம்பெனியின் இன்றைய தலைவர் நுஸ்லி வாடியா.

1924 முதல் முஸ்லிம் லீக்கை முழுவதும் சீராக்கி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஏழு ஆண்டுகள் பாடுபட்டார். "இந்திய விடுதலைக்கு இந்திய-முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை காரணமாக இருக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப கூறுகின்றேன். இதற்கு எதிரான நிலையை யாரும் எடுத்தால் அவர்களை முஸ்லிம் மக்களின் விரோதி என்று அழைக்கத் தயங்கமாட்டேன்'' என்று லாகூர் நகரில் பிரகடனப்படுத்தியவர்தான் ஜின்னா. 28-3-1929-ல் தன்னுடைய புகழ்பெற்ற 14 அம்ச அறிக்கையை ஜின்னா வெளியிட்டார். இந்த அறிக்கை இந்து-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தி பரந்த அதிகார பரவலாக்கலை உருவாக்கும் என்று ஜின்னா நம்பினார். ஆனால், இந்த நம்பிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.

எப்படி காங்கிரசுடன் எந்த உறவும் வைக்க முடியாது என்ற முடிவுக்கு 1920-களில் பெரியார் வந்தாரோ, அதேபோல் ஒரு முடிவுக்கு ஜின்னா 1929 முதல் தள்ளப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம் -குறிப்பாக ஸ்டாலின் தலைமையில் சோவியத் நாடுகளில் ஏற்பட்ட அதிகார கட்டமைப்பு மத்தியில் இருக்கும் முறையை- நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது உண்மை.

1927 சைமன் கமிஷன் முன்பு முஸ்லிம் மக்களுக்கு தனி வாக்கு தொகுதிகள் வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தபோது, அதை நேரு நிராகரித்தார்.

தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் தோல்வியடைய, 1936-ல் இந்தியா திரும்பிய ஜின்னா, தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பெற முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் லீக் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ்தான் பெருவாரியான இடங்களைப் பெற்றது. இந்த நிலையில் லீக்கும், காங்கிரசும் இணைந்து செயல்படுவது சீக்கிரம் சுதந்திரத்தை அடைய வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னா, இதற்காக அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜேந்திரபிரசாத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த முயற்சிக்கு எதிராக செயல்பட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், 1938-ல் காங்கிரஸ் மற்றும் லீக்குக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்ததாக அறிவித்தனர். இதுவே பாகிஸ்தான் என்கிற கோஷம் உருவாக காரணமாக அமைந்த விஷயம். 1940-க்கு முன்பு பாகிஸ்தான் என்று ஒரு சொல்லே அகராதியில் கிடையாது. 1940-ல் லாகூர் நகரில் நடைபெற்ற லீக் மாநாட்டில்தான் இந்த சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை என்கிற அடிப்படையில் உருவான இந்த கருத்தாக்கம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. TWO NATION THEORY என்று பல்வேறு பரிமாணங்கள் உடைய இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று இரு தேசிய அடையாளமாக சுருக்கியதுதான் ஜின்னாவின் மிகப்பெரிய பலவீனம். மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தான், 1971-ல் மொழியின் அடிப்படையில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பிரிவு TWO NATION THEORY என்பதின் தவறான புரிதலின் வெளிப்பாடு ஆகும்.

மதத்தின் அடிப்படையில் தேசியத்தை கட்டமைக்காமல் சிறுபான்மையினர் என்கிற முறையில் ஜின்னா தன்னுடைய அரசியலை நடத்தியிருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு ஒரு அழகிய பரிமாணத்தைப் பெற்றிருக்க முடியும். இதை அவர் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அவரே ஒரு காரணம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ""மத்தியில் அதிகார குவிப்பு'' என்கிற நிலைதான் ஊற்றுக்கண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் ஜஸ்வந்த்சிங்கின் நூல் எடுத்துரைக்கிறது.

அதற்காக அவர் கொடுத் திருக்கும் விலை தான் உருவாக்கிய கட்சியிலிருந்து நீக்கப்படும் நிலை. இது ஒன்றும் பெரிதல்ல என்றே நாளைய வரலாறு தீர்மானிக்கும்.

-நன்றி நக்கீரன்