Sunday, May 1, 2011

எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி மீது துப்பாக்கிச்சூடு-கவலைக்கிடம்


Akbar_Owaisi_(6)
ஹைதராபாத்:ஆந்திரபிரதேச மாநிலத்தில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கவலைக்கிடமான அக்பருத்தீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது சட்டமன்றத்தொகுதியில் சந்திரயானா குட்டாவில் ஒரு நிகழ்ச்சியி பங்கேற்றுவிட்டு காரில் திரும்புவேளையில் 4 மர்ம நபர்கள் அக்பருத்தீன் உவைஸியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.உவைஸியுடன் சென்ற இன்னொரு எம்.எல்.ஏவான அஹ்மத் பலாலாவுக்கும் துப்பாக்கிச்சூட்டில் காயமேற்பட்டது.
 மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ பதவியை வகிக்கும் அக்பருத்தீன் உவைஸிக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.வாகனத்தை பெரும்பாலும் அக்பருத்தீன் உவைஸிதான் ஓட்டுவார்.ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்தான் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராக அக்பருத்தீன் உவைஸி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.எம்.எல்.ஏ பலாலாவின் மெய்க்காப்பாளர் திரும்பிச்சுட்டதில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் ஒருவருக்கு காயமேற்பட்டதாக கூறப்படுகிறது.
 இச்சம்பவத்தைத்தொடர்ந்து ஆந்திரமாநில முதல்வர் உயர்மட்டக்கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.உள்துறை அமைச்சர் பி.ஸபீதா இந்திர ரெட்டி, டி.ஜி.பி.கெ.அரவிந்த ராவ், கூடுதல் டி.ஜி.பி(உளவுத்துறை) எம்.மஹேந்தர் ரெட்டி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 முதல்வர், உள்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உவைஸியை சந்தித்தனர்.உவைஸி அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.உவைஸியின் உடலிலிருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.
 நகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வியடைந்ததாக குற்றஞ்சாட்டி மாநகர போலீஸ் கமிஷனர் எ.கெ.கானை எம்.ஐ.எம் உறுப்பினர்கள் கெரோ செய்தனர்.அக்பருத்தீன் உவைஸி எம்.ஐ.எம். தலைவர் சுல்தான் ஸாலாஹுத்தீன் உவைஸியின் மகனாவார்.தற்போது எம்.ஐ.எம் கட்சியின் சட்டமன்றத்தலைவராகவும் உள்ளார்

0 comments:

Post a Comment