Sunday, October 31, 2010

அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து



அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது.
இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதையொட்டியே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் என்று தெரிகிறது.
மிகவும் சர்ச்சைக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி நட்டஈட்டு சட்ட மசோதா மீது அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் சந்தேகம் தெரிவித்திருந்தன. இந்திய அணுசக்தி நட்டஈட்டு சட்டத்திலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தியா இப்போது அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தப்படி சர்வதேச விதிகளின்படி நட்டஈடு அளித்தால் போதுமானது. இந்த ஒப்பந்தப்படி அணு உலைகளை அல்லது அணு மின் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனம் தர வேண்டிய நட்டஈட்டு நிதி காலவரையறை, சட்டப்படியாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது இந்த ஒப்பந்தம்.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுவிபத்து நட்டஈட்டு சட்டம் குறித்து சந்தேகங்களைத் தெரிவித்த அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நிவாரணமாக இந்தியா அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டால்தான் அவரது இந்திய பயணத்தின்போது புதிய அணு மின் திட்டடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று எண்ணத்தில் இந்தியா அணு விபத்து நட்ட ஈடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

அமெரிக்கா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு பொதிகள்!


அமெரிக்காவுக்கு செல்லவிருந்த யேமென் விமானங்களீல் வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யேமன் நாட்டிலிருந்து இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.
பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் எம்.ஐ.6 ற்கு கிடைத்த தகவலை அடுத்து,  பிரித்தானியா, மற்றும் டுபாய் நகரங்களில் நிறுத்தப்பட்ட இவ்விமானங்களில் சோதனையிடப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த அச்சிடும் இயந்திரங்களில் (பிரிண்டரில்) உபயோகிப்படும் மைநிரப்பும் காட்ரிஜ்ஜினுள் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவில் உள்ள யூத மத வழிபாட்டு தலங்களை குறி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம்  இப்பிரிண்டர் பொதிகளில், சிகாகோவில் இருக்கும் யூத வழிபாட்டு தலங்களின் முகவரியே இடப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகிறது.இது தொடர்பில் கருத்துரைத்த பிரிட்டன்  உள்துறை செயலரான தெரெசா மே, இது வெட்க்க வைக்க கூடிய உபகரணம் தானா என நிபுணர்கள்
ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பொதிகள் பிடிபட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனில் டெய்லி கிராப் செய்தி இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் முதலில் கிடைத்துள்ளதாக குற்ப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து யெமனில் இருந்து அனுப்பபப்டும் ஆட்கள் கூட வராத பொதிகளை தனது வான் வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன்
அறிவித்துள்ளது.

Saturday, October 30, 2010

வரும்முன் காப்போம் முகாமுக்கு வந்தவர் சாவு

புதுக்கோட்டை, அக். 30:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வரும் முன் காப்போம் முகாமுக்கு சிகிச்சைக்காக வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இன்று தமிழக அரசின் வரும் முன் காப்போம் முகாம் நடந்தது.

இந்த முகாமில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக பெரியாளூரைச் சேர்ந்த சிகாமணி (35) வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செய்தி:  http://www.dinamani.com/edition/story.aspx?Title=வரும்முன்+காப்போம்+முகாமுக்கு+வந்தவர்+சாவு&artid=3

அயோத்தி நில வழக்கு-நவ. 30ல் அப்பீல் செய்கிறது நிர்மோகி அகாரா

அயோத்தி: அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நிர்மோகி அகாரா தெரிவித்துள்ளது.

அயோத்தி நில வழக்குகளில் முக்கியமான ஒன்று இந்த நிர்மோகி அகாரா. சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பின்படி நிர்மோகி அகாராவுக்கும் மூன்றில் ஒரு பங்கு இடம் தரப்பட வேண்டும்.

இந்த நிலையில், தீர்ப்பில் திருப்தி இல்லை எனத் தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நவம்பர் 30ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சுமூகத் தீர்வுக்கும் தாங்கள் தயாராக இருப்பதாக அது அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகாராவின் தலைவரான துறவி பாஸ்கர தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 30ம் தேதி நாங்கள் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம். அதேசமயம், சுமூகமான தீர்வு காணும் எங்களது முயற்சிகளும் தொடங்கும்.

அகாரா அமைப்பின் பிரதிநிதிகள், சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து ராமர் ஜென்மபூமி-பாபர் மசூதிப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்வார்கள் என்றார்.

சமரசப் பேச்சில் அப்துல் கலாம்

இதற்கிடையே, சமரசப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைக்கவும் ஒரு முயற்சி தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அப்துல் கலாம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை கொண்ட குழுவை அமைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளை விரிவான அளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Friday, October 29, 2010

இந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள்


ஜகார்தா: திங்கள்கிழமை இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கியபோது அது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் செயல்படாதது தெரியவந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவை மிக பயங்கர நிலநடுக்கம் [^]தாக்கி சுமார் 2 லட்சம் பேர் பலியாயினர். இதையடுத்து சுனாமி அலைகள் உருவானால் அது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் கடலில் பொறுத்தப்பட்டன.

கடலில் மிதவைகளில் நிலை நிறுத்தப்பட்ட இந்தக் கருவிகள், கடலின் நீர் மட்டம் திடீரென உயரும்போது அது குறித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். இதையடுத்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு கடலோரப் பகுதி மக்கள் வெளியேற வகை செய்யப்பட்டது.

ஆனால், அமெரிக்கா [^] , ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியோடு பெரும் செலவில் வாங்கப்பட்டு பொறுத்தப்பட்ட இந்த அதிநவீன கருவிகள் கடந்த திங்கள்கிழமை சுனாமி அலைகள் தாக்கியபோது செயல்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இவை உரிய பராமரிப்பு இல்லாததால் செயல்படாமல் போனதாக புகார் கூறப்படுகிறது. ஆனால், இந்த மிதவைகள் சில கும்பல்களும் மீனவர்களும் சேதப்படுத்திவிட்டதால் தான் அவை இயங்காமல் போனதாக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் சுனாமி அலைகள் தாக்கி 10 கிராமங்கள் [^] நீரில் மூழ்கி 233 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேரைக் காணவில்லை.

இதற்கிடையே இந்த கருவிகள் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் சுனாமி அலைகள் தாக்குவதற்குள் மக்கள் வெளியேறியிருக்க முடியுமா என்பது சந்தேகமே என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மென்டாவி, பகாய், சிபுரோ தீவுகளுக்கு அருகே கடலில் 50 கி.மீ தூரத்தில் தான் திங்கள்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. அடுத்த 10 நிமிடத்தில் அலைகள் தாக்கிவிட்டன. இதனால் அவ்வளவு குறுகிய காலத்தில் இரவு நேரத்தில் அத்தனை மக்களும் தப்பியோடியிருக்கவும் வாய்ப்பில்லை என்கின்றனர்.
செய்தி: http://thatstamil.oneindia.in/news/2010/10/28/indonesian-tsunami-alert-failed.html  

அமைச்சர் உபயத்துல்லா மகன் உசேன் மரணம்: திமுகவினர் அஞ்சலி

தஞ்சை: தமிழக வணிகவரித்துறை அமைச்சர் [^]உபயத்துல்லாவின் மகன் உசேன் (40) நெஞ்சு வலியால் உயிர் இழந்தார்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40). இவர் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் அமைச்சர் வசித்து வருகிறார்.

திருமணமான உசேனுக்கு குழந்தைகள் இல்லை. தந்தைக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார்.

இன்று காலை வீட்டில் இருந்த உசேன் திடீர் என்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள் அவர் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்தார். அவரின் உடலுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி:   http://thatstamil.oneindia.in/news/2010/10/28/minister-ubayadullah-son.html

Thursday, October 28, 2010

மலேசியாவின் இஸ்லாமிய வங்கி செயல்பாடு : இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்


கோலாலம்பூர் : மலேசிய அரசின் இஸ்லாமிய வங்கி செயல்படுவதை போன்று, இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படி, ரிசர்வ் வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டுள்ளார்.
மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அந்நாட்டு பிரதமர் முகமது நஜிப் டுன் அப்துல் ரஜாக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வர்த்தகத்தை பெருக்கி கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2011ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது. இதன் பின் ஆறு மாதத்தில் இது நடைமுறைக்கு வருகிறது. பெட்ரோலியம், மரபு சாரா எரிசக்தி, வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்வதென, முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களை சந்தித்த மலேசிய பிரதமர் ரஜாக் நிருபர்களிடம் கூறுகையில், "பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இரட்டிப்பாகும். மலேசியா தற்போது இந்தியாவுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது. தடையற்ற ஒருங்கிணைந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும், 2015ம் ஆண்டில் வர்த்தகத்தின் அளவு 70 ஆயிரம் கோடி ரூபாயாகும்' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய - மலேசிய உறவில் இன்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை பெருக்கி கொள்ளும் வகையில், ரஜாக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. மலேசியாவில் கட்டுமானம் மற்றும் தயாரிப்பு துறைகளில் இந்திய கம்பெனிகள் பெரும் முதலீடுகளை செய்யவும், மலேசியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன். பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டு பயணிக்க இருக்கிறது.
மலேசிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையை போன்று, இந்தியாவிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இது பற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப்பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் துவக்க முன்வர வேண்டும். அன்னிய நேரடி முதலீடு நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளோம். 
குறிப்பாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மலேசிய கம்பெனிகளுக்கு நீண்ட காலத்திற்கு தங்கள் முதலீட்டை ஏற்படுத்தி கொள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணிகள் மேம்பாட்டுக்காக நாங்கள் விரிவான திட்டங்களை வகுத்துள்ளோம். இதில், மலேசிய கம்பெனிகளும் பங்கேற்கும் போது, ஒரு உறுதியான வளர்ச்சியை காண்பதோடு, கட்டுமானத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில், இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் இணைந்து உருவாக்கிய விமான நிலையங்கள் சிறப்பான முறையில் உள்ளன. இதுவே ஒரு உதாரணம்.
சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் விரும்புகிறோம். சீனாவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சு வார்த்தை நல்ல பலனை கொடுக்கும். இந்தியாவும் சீனாவும் உலகளவில் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. சீனா இந்தியாவுடன் மிகப் பெரியளவில் வர்த்தக உறவை கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், உலகளவில் பெரும் சக்தியாக விளங்க முடியும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

ஈராக் முன்னாள் அமைச்சரும், சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை


ஈராக் முன்னாள் அமைச்சரும், சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை

பாக்தாத்: சதாம் உசேனின் வெளிநாட்டு முகமாக திகழ்ந்தவரும், ஈராக் அரசின் குரலாக பன்னாட்டு அரங்குகளில் பல காலம் ஒலித்தவரும், ஈராக் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈராக் கோர்ட்.

அவரை சாகும் வரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு- ஷியா முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டார். ஷியா முஸ்லீம்களின் கட்சிகளை ஒடுக்கினார். ஷியா பிரிவினைச் சேர்ந்தவர்களை கொலை செய்தார் என்பதாகும்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து உள்ளே புகுந்த சிலகாலத்திற்குள் சதாம் உசேன் உள்ளிட்ட தலைவர்கள் பிடிபட்டனர். அதன் பின்னர் விசாரணை கோர்ட்டை அமைத்து அவசரம் அவசரமாக விசாரணை நடத்தி சதாம் உசேனை முதல் ஆளாக தூக்கிலிட்டுக் கொன்றது அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த ஈராக் அரசு.

பின்னர் சதாமின் ஒன்று விட்ட சகோதரரான கெமிக்கல் அலியை சில மாதங்களுக்கு முன்பு தூக்கிலிட்டுக் கொன்றனர். 5000க்கும் மேற்பட்ட குர்து இன மக்களை விஷ வாயு செலுத்திக் கொன்றார் கெமிக்கல் அலி என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்த நிலையில் தற்போது சதாம் உசேனின் நெருங்கிய நண்பரும், அந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கும் மரண தண்டனை அளித்துள்ளது ஈராக் அரசு.

சதாமைப் போலவே தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் தாரிக் அஜீஸ். ஈராக்கின் சர்வதேச முகமாக திகழ்ந்தவர். சதாம் காலத்தில் ஈராக் சார்பில் பன்னாட்டு அரங்குகளில் இவர்தான் ஈராக்கின் குரலாக ஒலித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்திய போக்கை கடுமையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்தவர். அமெரிக்கா [Image] வின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் வெறியை தொடர்ந்து கண்டித்து வந்தவர்.

இந்த நிலையில் தற்போது அஜீஸுக்கு மரண தண்டனைவிதித்துள்ளது ஈராக் உயர் டிரிப்யூனல். இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் முகம்மது அப்துல் சாஹிப் கூறுகையில், 74 வயதான தாரிக் அஜீஸை சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை. அவர் அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்றார்.

ஒரே கிறிஸ்தவர்

தாரிக் அஜீஸ் அடிப்படையில் கிறிஸ்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மைக்கேல் யூஹனா. வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சர் என்ற ஊரில் 1936ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். சைதியான் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.

தான் கிறிஸ்தவராக இருந்தாலும் ஒரு முஸ்லீமாகவே வாழ்ந்து வந்தவர். இதற்காக தனது பெயரையும் தாரிக் அஜீஸ் என மாற்றிக் கொண்டார். சதாம் உசேனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். சர்வதேச அளவில் பல அமெரிக்க ஆதரவு நாடுகளாலும் மதிக்கப்பட்ட ஈராக் தலைவர் இவர் மட்டுமே.

தாரிக் அஜீஸ் தவிர முன்னாள் உள்துறை அமைச்சர் சதான் சகேர், அபித் ஹமூத் ஆகியோரையும் தூக்கிலிடுமாறு நேற்று ஈராக் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஷியா முஸ்லீம்களை வடக்கு ஈராக்கிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வழக்கில் தாரிக் அஜீஸுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சித்திரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு கொலைகளைச் செய்தார் என்று கூறி தூக்குத் தண்டனை விதித்து விட்டனர்.

நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின்போது சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் வாட்பன் இப்ராகிம் அல் ஹசன் என்பவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இவரும் உள்துறை அமைச்சாரக இருந்தவர்தான்.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்து ஊடுறுவிய பின்னர் ஒரு மாதம் கழிந்த நிலையில், 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார் அஜீஸ். அதன் பின்னர் பாக்தாத் நகரில் அமெரிக்கா அமைத்த சிறையில் அஜீஸ் அடைக்கப்பட்டார். பின்னர் ஜூலை மாதம் அஜீஸை, ஈராக் படைகளிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

அவருடன்மேலும் பல ஈராக் தலைவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். அமெரிக்கப் படையினரின் காவலில் அஜீஸ் இருந்தபோது அவருக்கு பலமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதமும் ஏற்பட்டது. தடியை ஊன்றியபடிதான் அவர் பலமுறை கோர்ட்டுக்கு வந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.

வாடிகன் தலையிடுகிறது

இதற்கிடையே, தாரிக் அஜீஸை தூக்கிலிடக் கூடாது என்று வாட்டிகன் சிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தண்டனையை தடுத்து நிறுத்தப் போவதாக அது கூறியுள்ளது.

இதுகுறித்து வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பெடரிகோ லம்பார்டி கூறுகையில், இந்த தண்டனை நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் வாட்டிகன் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் அஜீஸைக் காக்கவும் வாட்டிகன் முயற்சிக்கும் என்றார்.

இதற்கிடையே, அஜீஸின் வழக்கறிஞர் பதீ இஸ்ஸாத் ஆரிப் ஜோர்டான் தலைநகர் அம்மானில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக் போரின்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்பாதுகாப்பு [Image] ப் படையினர் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் அஜீஸுக்குத் தண்டனை கொடுத்துள்ளனர்.

இது மிகவும் அநியாயமான தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளமுடியாதது. அடுத்து என்ன நடவடிக்கை [Image] எடுப்பது என்பது குறித்து யோசித்து வருகிறோம் என்றார்.

1991ம் ஆண்டு குவைத்துக்குள் ஈராக் ஊடுறுவியபோது அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்கத் தயாரானது. இதையடுத்து அமெரிக்கா விரைந்த அஜீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கரிடம் பேசினார். அப்போது ஈராக் தரப்பு வாதங்களை துணிச்சலுடன் முன்வைத்தார். இருப்பினும் வளைகுடாப் போரைத் தவிர்க்க முடியவில்லை.

பின்னர் 2003ம் ஆண்டு ஈராக்குக்குள் அமெரிக்கா ஊடுறுவ முயன்றபோது அதற்கு முன்பாக போப்பாண்டவரை வாட்டிகன் சென்று சந்தித்தார் அஜீஸ். வாட்டிகனின் உதவியைக் கோரினார். ஆனாலும் அமெரிக்கா தனது போர் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது அஜீஸ் துணைப் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீஸ் அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்பீல் மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பின்னர் 30 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஈராக் அதிபர் மாலிக்கி கையெழுத்திட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தண்டனை நிறைவேற்றப்படும்.

ஈராக் அரசுக்கு அஜீஸ் மகன் கண்டனம்

தனது தந்தைக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மிகவும் அநீதியான செயல் என்று அஜீஸின் மகன் ஜியாத் அஜீஸ் கூறியுள்ளார். தற்போது அவர் ஜோர்டானில் தங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது தந்தை குற்றவாளி இல்லை. மாறாக, பலகடவாக்கப்பட்டவர். அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஈராக் அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தண்டனயை அளித்துள்ளது என்றார்.

சதாம் ஆட்சியைச் சேர்ந்த 9 முக்கியப் புள்ளிகள் இன்னும் அமெரிக்கப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹஷீம் அல் தெயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகள் : http://thatstamil.oneindia.in/news/2010/10/27/iraq-saddam-tariq-aziz-death-sentence.html

Wednesday, October 27, 2010

Who is behind 9/11 Twin Tower terror attack? answer by Dr.Zakir Naik in ...

"The Lost Kingdom: History of Andalus" @ University of Toronto, Canada -...

Saddam Hussein history in tamil

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.


அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும்,அத்வானியும்,மோடியும்சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில்அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானதுஅநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்துஅமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம்அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல்ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டுதீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும்அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவிஅதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992
ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால்ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.
இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும்,பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.
அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும்அத்வானியும்,மோடியும்,சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும்இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.
ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில்அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச்சிறுத்தைகள் கருதுகிறது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி தாக்கியது

ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடு்க்கத்தையடுத்து சுமத்ரா தீவுக்கு அருகே உள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இதில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ள. பலரைக் காணவில்லை. அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2.42 மணிக்கு (அந் நாட்டு நேரப்படி நேற்றிரவு 9.42 மணிக்கு) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு சில கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

கடும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடனேயே சுனாமி அலைகள் உருவாகும் என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் முன் கூட்டியே கடலோரப் பகுதிகளை விட்டு ஓடிவிட்டனர். இதனால் அலைகள் தாக்கியபோது பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் மென்டாவி தீவின் மக்கரோனி பே என்ற இடத்தில் சில வீடுகளும் மக்களும் கடலுக்குள் இழுத்து்ச் செல்லப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

அதே போல கடலில் 9 ஆஸ்திரேலியர்கள் சென்ற இரு படகுகள் சுனாமி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் ஒரு படகு வெடித்துச் சிதறியுள்ளது. இதையடுத்து இதிலிருந்த சிலரைக் காணவில்லை.

அதே நேரத்தில் இனியும் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பில்லை என்பதால் அந்த எச்சரிக்கை இன்று காலை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

கடல் காற்று அதிகம் நிலவும் மென்டாவி தீவு சர்பிங் செய்வதற்கு மிக ஏற்க கடற்கரை என்பதால், இங்கு வெளிநாட்டுப் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கியதில் 1.68 லட்சம் மக்கள் பலியானது நினைவுகூறத்தக்கது.

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை அறிவிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று உச்சநீதிமன்றம் விலக்கியது. இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளன.

இருப்பினும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம்.

ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. எஸ்.ஐ.டி. பலரையும் தொடர்ந்து விசாரித்து வருகிறது. எனவே இதில் மட்டும் தீர்ப்பு அறிவிக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த மே 6ம் தேதி தீர்ப்புகளை வெளியிடுவதற்கு இதே பெஞ்ச் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Abu Ali - Rasulullah (NASHEED WITH THE MESSAGE VIDEO)

Tuesday, October 26, 2010